விவசாய கடன் இலக்கு ரூ.11 லட்சம் கோடியாக உயர்வு... ஜேட்லி அறிவிப்பு!
2018-19ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கான கடன் இலக்கு ரூ. 11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார்.
Recommended Video

டெல்லி : 2018-19ம் நிதியாண்டில் விவசாயிகளுக்கான கடன் இலக்கு ரூ. 11 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி அறிவித்துள்ளார்.
லோக்சபாவில் பட்ஜெட் உரையை வாசித்து வரும் அருண்ஜேட்லியின் இதுவரையிலான அறிவிப்புகளில் விவசாயத் துறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு கடன் அட்டைகள் வழங்கப்படுவது போல மீனவர்கள், கால்நடை வளர்ப்பு விவசாயிகளுக்கும் கிசான் கடன் அட்டைகள் வழங்கப்படும் என்றார். வேளாண்மை வருவாயை பெருக்கும் வகையில் திட்டங்கள் தீட்டப்பட்டு உள்ளதாக ஜேட்லி கூறினார்.
மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலமாக இயற்கை வேளாண்மை ஊக்குவிக்கப்படும். விவசாயிகள் நீர்பாசனத்திற்காக சோலார் பம்புகளை அமைத்து வருகின்றன, எனவே மாநில அரசுகள் இந்த திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு அதற்கான திட்ட வடிவங்களை அமைத்துள்ளது. நீர்பாசனத்திற்கு தேவையான நிதியை நபார்டு மூலம் பெற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
அரசு ஒவ்வொரு ஆண்டும் விவசாயத் துறைக்கான கடன் இலக்கை அதிகரித்து வருகிறது. 2014 -15ம் ஆண்டில் விவசாய கடன் இலக்கு ரூ. 8.5லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டது, 2017-18ம் நிதியாண்டில் ரூ. 10 லட்சம் கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிதியானது 2018-19ம் நிதியாண்டில் விவசாய கடன் இலக்கானது ரூ. 11 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications