ஒரு சில திட்டங்களை தவிர்த்து, பழைய ஆட்சியின் பல்லவியையே பாடிய ஜேட்லி
டெல்லி: இன்றைய மத்திய பட்ஜெட்டில் காங்கிரஸ் தலைமையிலான அரசு கடந்த பத்தாண்டுகளில் பாடிய அதே பல்லவியை பாடினார் நிதி அமைச்சர் அருண் ஜேட்லி. ஒரு சில அறிவிப்புகளை தவிர்த்து பார்த்தால் சொல்லிக் கொள்ளும் படியான பெரிய அறிவிப்புகள் எதுவும் பட்ஜெட்டில் இல்லை.
கடந்த, காங்கிரஸ் தலைமையிலான அரசின் அனைத்து 10 பட்ஜெட்களிலும் தவறாமல் இடம் பெறுவது, வறுமை ஒழிப்பு, ஊரக மேம்பாடு, சாலை மேம்பாடு, சுகாதாரம், சுத்தம் என்ற வார்த்தைகள். ஆனால் இதை நிறைவேற்ற சொல்லிக் கொள்ளும் பெரிய திட்டம் எதையும் கொண்டு வரவில்லை.

ஜேட்லியின் முதல் பட்ஜெட்டிலும் இதே வார்த்தைகள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் செயல் திட்டம் வரையறுக்கப்படவில்லை. எனவே, வழக்கம்போல காகித உரையாகத்தான் இது பார்க்கப்படுகிறது. எந்த திட்டத்தையுமே எப்படி செயல்படுத்த வேண்டும் என்ற விவரம் இல்லாதது மட்டுமின்றி, போதிய அளவுக்கு நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.
அதே நேரம், வருமான வரி உச்ச வரம்பு அதிகரிக்கப்பட்டது பெரும்பான்மையோரால் பாராட்டப்பட்டுள்ளது. வீட்டுக் கடன் வட்டி மீதான வரி வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதும், வீட்டுக் கடன் பெற்றோரை நிம்மதியடையச் செய்துள்ளது.
கங்கையை சுத்தம் செய்ய ஒதுக்கப்பட்ட ரூ.2037 கோடி ஒரு பெரிய திட்டமாகும். நதிநீர் இணைப்பு குறித்து ஆய்வு நடத்த ரூ.100 கோடி ஒதுக்கியுள்ளது நல்ல திட்டமாகும். மற்றபடி புதிய திட்டங்கள் எதுவுமில்லாமல், புதிய கோப்பையில் பரிமாறப்பட்ட பழைய ஒயினாகவே காட்சியளிக்கிறது மோடி அரசின் முதலாவது பட்ஜெட்.
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
மேகதாதுவால் வெடித்தது அடுத்த போர்! கதி கலங்கி நிற்கும் காங்கிரஸ்.. டெல்லி வரை போன மேட்டர்! -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
சொந்த தொகுதியில் டெபாசிட் வாங்க முடியல! எங்களை விமர்சிப்பதா? ஒரே காமெடி! சீமானுக்கு காங்கிரஸ் பதிலடி -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி











Click it and Unblock the Notifications