வன்முறைக்கு இவங்க தான் காரணம்! சரி மறப்போம்.. மன்னிப்போம்! சுதந்திரநாளில் மணிப்பூர் சிஎம் பரபரப்பு
இம்பால்: மணிப்பூரில் 3 மாதங்களுக்கும் மேலாக வன்முறை நடந்து வரும் நிலையில் சுதந்திர தினமான இன்று மறப்போம்.. மன்னிப்போம் என அம்மாநில முதல்வர் பீரன் சிங் மக்களுக்கு கோரிக்கை வைத்துள்ளார். அதோடு மணிப்பூர் வன்முறையின் பின்னணியில் உள்ளவர்கள் யார்? என்பது பற்றியும் கூறி அவர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இங்கு வசிக்கும் மக்கள் மைத்தேயி மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு குக்கி பழங்குடியின மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பாக கடந்த மே மாதம் 3ம் தேதி நடந்த ஊர்வலத்தில் வன்முறை வெடித்தது.

3 மாதங்கள் கடந்த நிலையில் இன்னும் மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பவில்லை. வன்முறை தொடரும் நிலையில் ஆங்காங்கே பதற்றம் நிலவி வருகிறது. இந்த வன்முறையில் 180க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். 3 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
மேலும் குக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 2 பெண்களை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ வெளியாகி நாட்டையை உலுக்கியது. இதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்த நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை மணிப்பூர் போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு இதுகுறித்த விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில் தான் மணிப்பூர் வன்முறை விவகாரம் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் எதிரொலித்தது. ராஜ்யசபா, லோக்சபா உள்ளிட்டவை முடங்கின. இறுதியாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு லோக்சபாவில் எதிர்க்கட்சியினர் மணிப்பூர் பற்றி பேசினர். அதற்கு பிரதமர் நரேந்திர மோடியும் விளக்கம் அளித்தார். மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுப்பதாக பிரதமர் மோடி கூறினார்.
இந்நிலையில் தான் இன்று நாடு முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியை ஏற்றிய பிரதமர் மோடி, "மணிப்பூர் மக்களுடன் நாடு நிற்கிறது. அமைதியின் மூலமே அங்கு தீர்வு காண முடியும். மத்திய, மாநில அரசுகள் தீர்வு காண அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றன." என்றார்.
இந்நிலையில் தான் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நடந்த சுதந்திர தின விழாவில் அம்மாநில முதல்வர் பீரன் சிங் பங்கேற்று கொடியேற்றி வைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். அதன்பிறகு அவர் பேசினார். இந்த வேளையில், ‛‛கடந்த 3 மாதங்களாக வளர்ச்சி பணி என்பது பாதிக்கப்பட்டுள்ளது.
அமைதி மற்றும் வளர்ச்சி பாதைக்கு நாம் திரும்ப வேண்டும். வன்முறை என்பது எந்த வளர்ச்சியையும் கொண்ட வராது. சமூகங்களுக்கு இடையேயான தவறான புரிதல் மற்றும் தவறான செய்தி பரவல் இருந்தால் அமர்ந்தும் விவாதிக்கலாம். இதற்கான கதவு எப்போதும் திறந்தே வைககப்பட்டுள்ளது.
மறப்பதன் மூலமாகவும், மன்னிப்பதன் மூலமாகவும் நாம் இணக்கமாக வாழ முடியும். அதோடு கடந்த 3 மாதங்களாக இழந்த வளர்ச்சிப் பாதையின் பயணத்தை நாம் தொடங்க முடியும். மாநில வன்முறைக்கு வெளியில் இருந்து வரும் சக்திகள் தான் காரணம். இந்த சக்திகள் தான் அமைதியை சீர்க்குலைக்க முயற்சித்தன.
இந்திய அரசியலமைப்பு எதிராக மாநில அரசு எதையும் செய்யவில்லை. அதனை ஒருபோதும் செய்யவும் மாட்டோம். அப்படி செய்தால் அரசு ஒருபோதும் நிலைத்து நிற்க முடியாது. இதனால் மக்கள் அமைதி காக்க வேண்டும். அதோடு நீதி, சமத்துவத்துக்கு நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். மேலும் போதைப்பொருளுக்கு எதிரான போர் என்பது தொடரும்'' என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications