என்னை மன்னித்து விடுங்கள்... நான் செய்தது மிகப்பெரிய தவறு... தொண்டர்களிடம் கெஞ்சிய சித்து
அமீர்தசரஸ்: ‛‛என்னை மன்னித்து விடுங்கள்... நான் செய்தது மிகப்பெரிய தவறு'' என தேர்தலுக்கு ஒருநாள் உள்ள நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து தொண்டர்களிடம் கெஞ்சினார்.
பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சரண்ஜித் சன்னி முதலமைச்சராக உள்ளார். மொத்தமுள்ள 117 சட்டசபை தொகுதிகளுக்கு ஒரேகட்டமாக பிப்ரவரி 20ல் தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ், ஆட்சியை பிடிக்க முயற்சிக்கும் பாஜக, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
பாஜக கூட்டணியில் காங்கிரஸ் முன்னாள் முதலமைச்சர் அமரீந்தர் சிங்கின் பஞ்சாப் லோக் காங்கிரஸ், முன்னாள் மத்திய அமைச்சர் சுக்தேவ் சிங் தின்ட்சாவின் எஸ்ஏடி(எஸ்) கட்சிகள் உள்ளன. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி இன்று மாலை 6 மணிக்கு பஞ்சாப்பில் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது.

சொந்த தொகுதி பிரசாரம்
இந்நிலையில் பிரசாரத்தின் இறுதிநாளான நேற்று பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்து அமீர்தரசரஸ் கிழக்கு தொகுதிக்குட்பட்ட கோல்டன் அவென்யூ பகுதியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார் அப்போது அவர் தொண்டர்களிடம் மன்னிப்பு கோரியதோடு, தான் செய்தது தவறு என கூறினார். இந்த பிரசார கூட்டத்தில் அவர் பேசியதாவது:

மன்னிப்பு
உங்களிடம்(தொண்டர்கள்) நேரடியாக தொடர்பு வைத்து கொள்ளாதது தான் எனது மிகப்பெரிய தவறு. நள்ளிரவு 1.30 மணிக்கு பார்க்க வந்த தொண்டர்களை நான் பார்க்கவில்லை. என்னை மன்னித்து விடுங்கள். அமீர்தசரஸ் மக்களிடம் ஒன்றை மட்டும் கூறுகிறேன். இனி அமிர்தசரஸை விட்டு எங்கும் செல்ல மாட்டேன். வருங்காலத்தில் தொண்டர்களுடன் ஒருமணிநேரம் பேச வசதியாக தொலைபேசி எண் கொடுப்பேன். இது உறுதியானது. நான் எனது தவறை ஏற்று கொள்கிறேன். கட்சி முடிவுகளை எடுக்கும் இடத்தில் அதாவது மாநில தலைவராக நான் இருக்கிறேன். அடுத்த 5 ஆண்டில் 100 ஆண்டுகளுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பேன்'' எனக்கூறினார்.

எதிர்க்கும் மூவர்
இந்த தொகுதியில் சித்துவை எதிர்த்து பாஜக சார்பில் ஜக்மோகன் சிங் ராஜூ, எஸ்ஏடி சார்பில் பிக்ராம் சிங் மஜிதியா, ஆம் ஆத்மி சார்பில் ஜீவன்ஜோத் கவுர் போட்டியிடுகின்றனர்.

கதவடைப்பு
இதற்கிடையே அமீர்தசரஸ் கிழக்கு தொகுதியில் சித்து தனது ஆதரவாளர்களுடன் பிரசாரத்துக்கு சென்றபோது அங்குள்ள மக்கள் வீட்டு கதவை பூட்டியதாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இதனால் தான் நவ்ஜோத் சித்து தொண்டர்களிடம் மன்னிப்பு கேட்டு அவர்களின் மனதை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications