குஜராத் முன்னாள் முதல்வர்... மாதவ் சிங் சோலங்கி காலமானார்... மோடி, ராகுல்காந்தி இரங்கல்!
ஆமதாபாத்: குஜராத் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மாதவ் சிங் சோலங்கி உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

குஜராத் முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான மாதவ் சிங் சோலங்கி உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை உயிரிழந்தார். அவருக்கு வயது 93. குஜராத் காந்திநகரில் உள்ள இல்லத்தில் மாதவ் சிங் சோலங்கியின் உயிர் பிரிந்தது.
சோலங்கி 1976-ல் முதன் முதலாக குஜராத் முதல்வராக பதவிஏற்றார். குஜராத்தில் நான்கு முறை முதல்வராக பணியாற்றிய அவர் நரேந்திர மோடிக்கு பிறகு அந்த மாநிலத்தில் அதிக முறை முதல்வராக இருந்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். மாதவ் சிங் சோலங்கி 1991-92'ல் இந்தியாவின் வெளியுறவு அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். குஜராத் சார்பாக மாநிலங்களவைக்கு இரண்டு முறை எம்.பி.யாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவரது மகன் பரத்சிங் சோலங்கியும் முன்னாள் மத்திய அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது. மாதவ் சிங் சோலங்கியின் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications