உ.பி. சிறையில் திடீர் மரணம் அடைந்த 'தாதா' முக்தார் அன்சாரியின் தாத்தா இவரா? தமிழகத்துக்கு தொடர்பா?
லக்னோ: உத்தரப்பிரதேசத்தை கதிகலங்க வைத்த நிழல் உலக தாதா முக்தார் அன்சாரி சிறையில் திடீரென மரணமடைந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. தந்தையின் உணவில் மெல்லக் கொல்லும் விஷம் கலக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக முக்தார் அன்சாரியின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியதையடுத்து தற்போது உ.பி.யில் ஆளும் பாஜக அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் 1980களில் இருந்து நிழல் உலக தாதாவாக கோலோச்சியவர் முக்தார் அன்சாரி. இவர் மீது 60-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருந்தன. காங்கிரஸ் எம்.எல்.ஏ. கொலை வழக்கில் ஆயுள் தண்டனையும் முக்தார் அன்சாரிக்கு கிடைத்தது.

2005-ம் ஆண்டு முதல் சிறையில் இருந்து வரும் முக்தார் அன்சாரி, தேர்தல்களில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வானவர். அவரது மகனும் எம்.எல்.ஏ.தான்.
இந்த நிலையில்தான் முக்தார் அன்சாரி திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்ததாக அறிவிக்கப்பட்டது. ஆனால் முக்தார் அன்சாரியின் உணவில் மெல்லக் கொல்லும் விஷம் கலக்கப்பட்டது; அதனால்தான் மரணம் ஏற்பட்டது என்பது குடும்பத்தினர் குற்றச்சாட்டு. இதனையடுத்து முக்தார் அன்சாரியின் மரணம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் உத்தரப்பிரதேசத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

முக்தார் அன்சாரி யார்?: முக்தார் அன்சாரியின் தாத்தா பெயர் முக்தார் அகமது அன்சாரி. இந்திய விடுதலைப் போராட்ட வீரர். முஸ்லிம் லீக் தலைவராகவும் இருந்தவர். அத்துடன் மட்டுமல்ல்.. 1927-ம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மாநாடு டிசம்பர் 26-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை அன்றைய மதராஸாகிய இன்றைய தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில்தான் நடைபெற்றது.
இந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டுக்குத் தலைவராக இருந்தவர் முக்தார் அகமது அன்சாரிதான். இம்மாநாட்டில்தான் சைமன் கமிஷன் புறக்கணிப்பு! சைமனே திரும்பிப் போ என்கிற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பூரண சுயராஜ்ஜியமே இலக்கு என்ற பிரகடனத்தை ஜஹவர்லால் நேரு வெளியிட்டதும் இந்த மாநாட்டில்தான்.

மாஜி துணை ஜனாதிபதி உறவினர்: தற்போது மரணமடைந்த முக்தார் அன்சாரி, முன்னாள் துணை ஜனாதிபதி முகம்மது ஹமீத் அன்சாரியின் உறவினரும் கூட. நாட்டின் 12-வது துணை ஜனாதிபதியாக பதவி வகித்தவர் முகம்மது ஹமீத் அன்சாரி என்பதும் குறிப்பிடத்தக்கது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications