நேபாள முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு தீ வைப்பு.. மனைவி உயிரிழப்பு! கட்டுக்கடங்காமல் போகும் வன்முறை
காத்மாண்டு: நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையால் நேற்று வெடித்த போராட்டம் இன்று தீவிரம் அடைந்துள்ளது. சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கிய போதிலும் போராட்டமானது தீவிரம் அடைந்துள்ளது. இதனால், நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி ராஜினாமா செய்துள்ளனர்.
எனினும், போராட்டம் தணிந்தபாடில்லை. போராட்டக்கார்கள் நாடாளுமன்ற கட்டிடம், அமைச்சர்களின் வீடுகளுக்கு தீ வைத்தனர். முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு தீ வைத்த நிலையில் வீட்டில் இருந்த அவரது மனைவி தீக்காயம் ஏற்பட்டு உயிரிழந்தார்.

நேபாளத்தில் உச்சக்கட்ட பதற்றம்
நேபாளத்தில் சமூக வலைத்தளங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டன. இவற்றை ஏற்காத சமூக வலைத்தள நிறுவனங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது. உலகளவில் மிகவும் பிரபலமாக உள்ள பேஸ்புக், எக்ஸ், வாட்ஸ்அப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில், இதனால் வெகுண்டெழுந்த ஜென்- Z எனப்படும் இன்றைய 2K கிட்ஸ் தலைமுறையினர் வீதியில் இறங்கி போராடினர்.
இந்த போராட்டம் நாடு முழுவதும் தீவிரம் அடைந்ததால் கட்டுக்கடங்காத வன்முறை சூழலும் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள்-பாதுகாப்புப் படையினர் இடையே மோதல் ஏற்பட்டதால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதில் 19 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்தனர். இதையடுத்து போராட்டத்திற்கு அடிபணிந்த நேபாள அரசு, சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடையை விலக்கியது.
தீ வைத்து எரிக்கப்பட்டது
இதனால் போராட்டம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நேற்றை விட தீவிரமாக போராட்டம் நடைபெற்றது. திரும்பும் திசையெங்கும் போராட்டம், வீடுகள் எரிப்பு, கல்வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. நாடாளுமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து நேபாள பிரதமர் கே.பி. சர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
"சமூக ஊடக தடைக்காக மட்டும் எங்களின் போராட்டம் இல்லை. இளைஞர்களின் தலைமை நாட்டுக்கு வேண்டும் என்பதற்காகவே நாங்கள் போராடினோம்" என்று தெரிவித்த போராட்டக்காரர்கள், "இளைஞர் ஒருவர் நாட்டை வழிநடத்த வேண்டும்" என்றும் கூறினர்.
முன்னாள் பிரதமர் மனைவி உயிரிழப்பு
நேபாள போராட்டம் இன்று கட்டுக்கடங்காமல் போன நிலையில், அமைச்சர்களின் வீடுகள், முன்னாள் பிரதமர் ஜலாநாத் கனாலின் வீட்டிற்கும் தீ வைக்கப்பட்டது. இதில், வீட்டில் இருந்த முன்னாள் பிரதமரின் மனைவி ராஜ்யலட்சுமி சித்ரகார் உயிரிழந்தார். காத்மாண்டுவில் உள்ள டல்லு பகுதியில் அவரது இல்லம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
போராட்டக்காரர்கள் தீ வைத்ததில் படுகாயம் அடைந்த ராஜ்யலட்சுமி, கிர்திபுர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
நேபாளத்தில் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கும் தீ வைக்கப்பட்டது. காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்ட நிலையில், அமைச்சர்கள் ராணுவ ஹெலிகாப்டர்களில் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். நிலைமை மோசமாகி இருப்பதால், இந்தியர்கள் யாரும் நேபாளத்திற்கு செல்ல வேண்டாம் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications