For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காரும் வேண்டும், பெட்ரோலும் போட்டுத் தர வேண்டும்... மத்திய அரசை நெருக்கும் பிரதீபா பாட்டீல்

Google Oneindia Tamil News

டெல்லி: மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாம் குடியரசுத் தலைவராக இருந்தபோது அவர் செயல்பட்ட விதம், அவர் பணியாற்றிய விதம் குறித்து இந்தியா முழுவதும் மக்கள் விழுந்து விழுந்து உயர்வாகப் பேசிக் கொண்டுள்ள நிலையில் இன்னொரு முன்னாள் குடியரசுத் தலைவர் குறித்த ஒரு செய்தி வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சலசலப்பில் சிக்கியுள்ளவர் பிரதீபா பாட்டீல். இவர் குறித்து சர்ச்சைகள் வெடிப்பது இது முதல் முறையல்ல என்றாலும் கூட கலாம் மறைந்துள்ள இந்த நேரத்தில் இவர் மத்திய அரசுக்கு வைத்துள்ள கோரிக்கைதான் பலரையும் விமர்சனங்களை குவிக்க வைத்துள்ளது.

தனக்கென சொந்தமாக ஒரு அரசுக் கார் வேண்டும். அதேசமயம், தான் சொந்தக் காரையும் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். அதற்குரிய எரிபொருள் செலவையும் மத்திய அரசே கவனித்துக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளாராம் பிரதீபா பாட்டீல்.

டெக்கான் ஹெரால்டு செய்தி

டெக்கான் ஹெரால்டு செய்தி

இதுதொடர்பாக டெக்கான் ஹெரால்டு ஒரு செய்தி போட்டுள்ளது. அதில் அரசு விதிமுறைக்குப் புறம்பாக பிரதீபா பாட்டீல் சில சலுகைகளைக் கேட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசு விதிமுறை என்ன

அரசு விதிமுறை என்ன

அரசு விதிமுறைப்படி, முன்னாள் குடியரசுத் தலைவர்கள், ஒன்று சொந்தக் காரைப் பயன்படுத்தி் கொண்டு அதற்கான எரிபொருள் செலவை அரசிடமிருந்து பெறலாம். அல்லது அரசு வழங்கும் காரைப் பயன்படுத்திக் கொள்ளாம்.

அதுவும் வேண்டும்.. இதுவும் வேண்டும்

அதுவும் வேண்டும்.. இதுவும் வேண்டும்

ஆனால் பிரதீபா பாட்டீல் இந்த இரண்டையும் தனக்கு அளிக்க வேண்டும் என்று அரசிடம் கோரிக்கை வைத்திருப்பதாக அந்த செய்தி கூறுகிறது.

விளக்கம் கேட்டு கடிதம்

விளக்கம் கேட்டு கடிதம்

இதுதொடர்பாக பாட்டீலின் அலுவலகம் மத்திய அரசுக்கு விளக்கம் கோரியுள்ளதாம். புனேவில் தற்போது பிரதீபா பாட்டீல் வசித்து வருகிறார். நகரை விட்டுச் செல்லும்போது அவருக்கு அரசு காரை ஏற்பாடு செய்ய முடியுமா என்றும் பிரதீபா பாட்டீல் அலுவலகம் கேட்டுள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

வாய்பபில்லை

வாய்பபில்லை

இருப்பினும் இந்த இரட்டை சலுகையை மத்திய அரசு அனுமதிக்காது என்றே தெரிகிறது என மத்திய அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏதாவது ஒரு சலுகையைத்தான் முன்னால் குடியரசுத் தலைவரால் அனுபவிக்க முடியும் என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.

ஏதாவது ஒன்றை தேரவு செய்க

ஏதாவது ஒன்றை தேரவு செய்க

இதுதொடர்பாக பலமுறை பிரதீபா பாட்டீல் அலுவலகத்திலிருந்து உள்துறை அமைச்சகத்திற்குக் கடிதம் போனதாம். இதையடுத்து இரண்டில் ஒன்றை மட்டும் தேர்வு செய்யுமாறு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளதாம்.

கார் பிடிக்கவில்லை

கார் பிடிக்கவில்லை

முன்னதாக அரசு அவருக்கு ஒரு கார் கொடுத்திருந்தது. ஆனால் அது சரியில்லை என்று கூறவே அந்தக் கார் திரும்பப் பெறப்பட்டு விட்டதாம். தனக்கு பெரிய கார் வேண்டும் என்று பிரதீபா பாட்டீல் கோரியிருந்தாராம். ஆனால் அரசு அதைத் தரவில்லை. இதனால் பெட்ரோல் அலவன்ஸை மட்டும் பெற அவர் முடிவு செய்தார்.

வெளியில் போனால் அரசுக் கார்

வெளியில் போனால் அரசுக் கார்

உள்ளூரில் அவர் தனது சொந்தக் காரைப் பயன்படுத்தி வந்தார். வெளியில் போவதாக இருந்தால் மாவட்ட நிர்வாகம் அவருக்குக் கார் ஏற்பாடு செய்து தருகிறது.

மகாராஷ்டிர அரசு அதிருப்தி

மகாராஷ்டிர அரசு அதிருப்தி

பிரதீபா பாட்டீல் சொந்தக் காரையும் பயன்படுத்திக் கொண்டு அரசுக் காரையும் கேட்பதற்கு மகாராஷ்டிர அரசும் அதிருப்தி தெரிவித்துள்ளதாம். உள்துறை அமைச்சகத்திடம் இதுகுறித்து முறையிட்டுள்ளதாம்.

English summary
Former president Prathibha Patil has approached the centre regarding a govt car for her use.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X