பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது வாஜ்பாயின் உடல்

மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் புகழுடல் அவரது இல்லத்தில் இருந்து பாஜக அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் புகழுடல் அவரது இல்லத்தில் இருந்து பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நேற்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் இரவு 9.30 மணியளவில் கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

Former Prime Minister Vajpayee body is taken to BJP head office

பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவர் எல்கே அத்வானி, முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் நேற்றிரவே வாஜ்பாயின் இல்லத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் , தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.இதைத்தொடர்ந்து வாஜ்பாயின் உடல் கிருஷ்ண மேனன் மார்க்கில் உள்ள அவரது வீட்டில் இருந்து
பண்டிட்தீன் தயாள் உபாத்யாய் மார்க்கில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அலங்கரிக்கப்பட்ட ராணுவ ஊர்தியில் வாஜ்பாய் உடல் ஊர்வலமாக பாஜக அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டது. பிற்பகல் 1 மணி வரை பாஜகவினர், பொதுமக்கள், மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது.

பாஜக தலைமை அலுவலகத்தின் வாசலில் நின்றபடியே பிரதமர் மோடி, பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் அவரது புகழுடலை வரவேற்றனர்.

முப்படை வீரர்கள் மரியாதையுடன் மறைந்த பிரதமர் வாஜ்பாயின் உடல் பாஜக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டது. வாஜ்பாயின் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமான பாஜக தொண்டர்கள் தலைமை அலுவலகத்தில் காத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+