காதலை கைவிட மறுத்த சிறுவன்.. கழுத்தறுத்து கொடூரமாக கொலை.. டெல்லியில் பயங்கரம் !

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி: காதலை கைவிட மறுத்த சிறுவன், கழுத்து அறுக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் டெல்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி அருகிலுள்ள கஞ்சவாலா பகுதியைச் சேர்ந்தவர் ஜடின். 16 வயதான இவர், அப்பகுதியைச் சேர்ந்த மற்றொரு சிறுவனான குலான் என்பவரின் தங்கையை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

four juveniles arrested for allegedly involved in the brutal murder

தனது தங்கையை காதலிப்பதை நிறுத்திவிடுமாறு குலாம் பலமுறை ஐடினிடம் கூறியுள்ளார். ஆனால் ஐடினின் குலானின் பேச்சை கேட்கவில்லை. இதனால் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஆத்திரம் அடந்த குலான், தனது நண்பர்களுடன் ஜடினை பாலடைந்த பங்காளவுக்கு அழைத்துச் சென்று கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர்.

பின்னர் இந்த சம்பவத்தை ஒரு நண்பரிடம் சொல்லி, தப்பிக்க என்ன செய்யலாம் என்று கேட்டனர். அந்த சிறுவன், காவல் உதவி ஆய்வாளரின் மகன் என்பதால், நான் இதனை எனது தந்தையிடம் தெரிவிக்கிறேன், என்னால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டு தனது அப்பாவிடம் இந்த சம்பவத்தை கூறியுள்ளான்.

இதனைத்தொடர்ந்து, அந்த காவல் ஆய்வாளர், பாழடைந்த பங்களாவுக்கு சென்று அங்கு ரத்த வெள்ளத்தில் சடலமாக இருந்த ஐடினின் உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். தற்போது, அந்த 3 சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். காதலை கைவிடக்கோரி சிறுவர்களே கொலையில் ஈடுபட்டுள்ள சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The 16-year-old boy was found with his throat slit in an abandoned house in Kanjhawala on Friday.
Please Wait while comments are loading...