இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற மேலும் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை
ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இருந்து இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற நான்கு தீவிரவாதிகளை இந்திய ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜம்மு காஷ்மீர் மாநிலம் யூரியில் உள்ள ராணுவ நிர்வாகத் தலைமையகத்திற்குள் புகுந்து 4 தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய ராணுவ வீரர்கள் 19 பேர் வீர மரணம் அடைந்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய கமாண்டோ படை, 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' எனப்படும் அதிரடி தாக்குதல் நடத்தி பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த தீவிரவாத முகாம்களை அழித்தனர். இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் காஷ்மீரின் நவுகம் செக்டார் பகுதியின் இரண்டு இடங்கள் மற்றும் வடக்கு காஷ்மீரின் ராம்பூர் செக்டார் பகுதியில் ஊடுருவ முயன்ற நான்கு தீவிரவாதிகளை இன்று அதிகாலையில் ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர். மேலும், பாகிஸ்தானைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவத் தயார் நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனைத்
தொடர்ந்து, தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் வகையில் எல்லைப்பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இன்று காலை வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டம் லாங்கேட்டில உள்ள ராணுவ முகாமை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 3 தீவிரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டுக்கொன்றது குறிப்பிடத்தக்கது.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications