ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து.. கட்டாய கொண்டாட்டமா .. வீட்டு சிறையில் மெஹ்பூபா முஃப்தி
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டத்தை பாஜக தலைமையிலான மத்திய அரசு ரத்து செய்து இன்றுடன் 4 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முஃப்தி வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப் பிரிவு 370ஐ கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதியன்று பாஜக தலைமையிலான மத்திய அரசு திடீரென நீக்குவதாக அறிவித்தது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டத்தில் குதித்தன. இருப்பினும் மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தது. முன்னதாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்னர் ஜம்மு காஷ்மீரின் அரசியல் தலைவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டனர். இப்படியாக இந்த சிறப்பு சட்டம் நீக்கப்பட்டு இன்றுடன் 4 ஆண்டுகள் ஆகிறது.

ஜம்மு காஷ்மீரில் மதம் சார்ந்த விழாக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், சினிமா தியேட்டர்கள் போன்றவை திறக்கப்பட்டுள்ளதால் இயல்புநிலை திரும்பியுள்ளதாக மத்திய அரசு தொடர்ந்து கூறி வருகிறது. இந்நிலையில்தான் தற்போது ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், பிடிபி கட்சியின் தலைவருமான மெஹ்பூபா முஃப்தி வீட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "இன்று நான் வீட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறேன். இதேபோல எங்கள் கட்சி நிர்வாகிகள் பலரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல கட்சியினர் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவையனைத்தும் நேற்று நள்ளிரவில் நடந்தது. மத்திய அரசு இங்கு இயல்பு நிலை இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் கூறியிருந்த நிலையில் தற்போது இந்த கைது நடவடிக்கை மத்திய அரசின் செயலை அம்பலப்படுத்தியுள்ளது.
ஸ்ரீநகர் முழுவதும் சட்ட விரோதமாக 370வது சட்டப்பிரிவை ரத்து செய்ததை காஷ்மீர் மக்கள் 'கொண்டாட வேண்டும்' என்று பிரமாண்ட விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. அதே சமயம் மக்களின் உண்மையான உணர்வுகளை ஒடுக்க மிருகத்தனமான சக்தி பயன்படுத்தப்படுகிறது. தற்போது இது குறித்த விசாரணை உச்சநீதிமன்றத்திற்கு வந்திருக்கும் நிலையில், நீதிமன்றம் இந்த சம்பவங்களை கருத்தில் கொள்ளும் என்று நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.
சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதன் 4ம் ஆண்டு நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் அமைதியான நிகழ்ச்சிக்கு அரசியல் கட்சிகள் அனுமதி கோரியிருந்தன. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அதன் பின்னர்தான் கைது நடவடிக்கைகள் தொடங்கியதாகவும் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி குற்றம்சாட்டியுள்ளது. மேலும் தங்களது அலுவலகம் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அக்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications