அழகான இடத்தை காட்டுகிறேன்.. பிரான்ஸ் பெண்ணை அழைத்து தனியார் ஊழியர் செய்த செயல்.. பகீர்
ஜெய்ப்பூர்: இந்தியாவுக்கு சுற்றுலா வந்துள்ள பிரான்ஸ் நாட்டின் 30 வயது பெண்ணிடம், ‛‛அழகான இடத்தை காட்டுகிறேன்'' என அழைத்து சென்ற தனியார் நிறுவன ஊழியர் செய்த செயல் அனைவரையும் அதிர வைத்துள்ளது. அந்த பெண்ணை தனது பிளாட்டுக்கு அழைத்து சென்று அந்த ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தற்போது அந்த ஊழியரை போலீசார் தீவிரமாக தேடி வரும் நிலையில் பிரான்ஸ் பெண்ணை ஏமாற்றியது எப்படி? என்பது பற்றிய திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பெண் நம் நாட்டுக்கு சுற்றுலா வந்தார். இவருக்கு வயது 30. இவர் டெல்லியில் இருந்து ராஜஸ்தானின் உதய்ப்பூருக்கு பஸ்சில் வந்து இறங்கினார். உதய்ப்பூரில் உள்ள ஹோட்டலில் தனது நண்பர்களுடன் தங்கினார். இரவு நேரம் நெருங்கியது.

அந்த பிரான்ஸ் பெண், நண்பர்களுடன் சேர்ந்து டின்னர் சாப்பிட சென்றார். அப்போது ஹோட்டலில் நடந்த பார்ட்டியின்போது ஒருவர் பிரான்ஸ் பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளார்.
‛தம்’ அடிக்க..
அப்போது அவர் தன்னை தனியார் ஹோட்டல்களில் நிகழ்ச்சி, பார்ட்டிகளை தொகுத்து வழங்கும் நிறுவனத்தில் பணியாற்றுவதாக கூறினார். இதையடுத்து பிரான்ஸ் பெண் சகஜமாக அவரிடம் பேசியுள்ளார்.
இந்த வேளையில் அந்த நபர், ‛‛வாங்களேன் வெளியே போய் தம் அடிக்கலாம். உங்களுக்கு இன்னொரு அழகான இடத்தை காட்டுகிறேன்'' எனக்கூறியுள்ளார். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் என்பதால் அவருக்கு நிறைய இடம்தெரியும் என்று பிரான்ஸ் பெண் சுற்றுலா பயணி நினைத்தார். இதையடுத்து அவரும் நம்பி அவருடன் சென்றார். இருவரும் காரில் பயணித்தனர்.
பாலியல் பலாத்காரம்
அப்போது அந்த நபர் தான் வசித்து வரும் பிளாட்டுக்கு அழைத்து சென்று அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஒருவழியாக போராடி அந்த நபரிடம் இருந்து தப்பிய அந்த பிரான்ஸ் பெண் மீண்டும் ஹோட்டலுக்கு வந்து நடந்த சம்பவத்தை தனது நண்பர்களிடம் கூறினார்.
இதையடுத்து அவரை நண்பர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவமனைக்கு சென்ற போலீசிடம் பிரான்ஸ் பெண் புகாரளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.
யார் அந்த நபர்?
முதற்கட்ட விசாரணையில் அந்த பெண்ணை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்த நபர் சித்தார்த் என்று போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். தற்போது அவர் தலைமைறவாகி உள்ளார். அவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதற்கிடையே தான் அந்த பெண் அளித்த புகார் பற்றி திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அந்த பெண் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: ‛‛டெல்லியில் இருந்து பஸ்சில் உதய்ப்பூருக்கு வந்தேன். இங்கு ஓய்வில் இருந்தேன். இரவில் எனது நண்பர்களுடன் டின்னர் சாப்பிட சென்றேன். அப்போது எங்களின் டேபிள் அருகே ஒருவர் வந்து சிகரெட் புகைக்க அழைத்தார்.
அழகான இடத்தை காட்டுவதாக..
அழகான இடத்தை காட்டுவதாக கூறினார். கரில் ஏற்றி சென்றார். எனக்கு சந்தேகம் வந்தது. இதனால் ஹோட்டலில் விடும்படி கூறினேன். ஆனால் அவர் கேட்கவில்லை. அவரது பிளாட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு கட்டிப்பிடிக்கும்படி கூறினார்.நான் மறுத்தேன். அவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார்.
என் செல்போனில் சார்ஜ் இல்லை. நிலைமையை சமாளித்தபடியே அவரிடம் செல்போன் சார்ஜ் செய்ய சார்ஜர் கேட்டேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இதனால் என்னால் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதற்கிடையே என்னை கட்டிப்பிடித்தார். நான் அழுதேன். அவரது பிடியில் இருந்து தப்பிக்க முயன்றேன். என்னால் முடியவில்லை. கதறி அழுதேன். ஹோட்டலுக்கு என்னை அழைத்து செல்ல கெஞ்சி அழுதேன். ஆனால் அந்த நபர் என்னை பலாத்காரம் செய்தார். அதன்பிறகு அதிகாலை 6 மணிக்கு என்னை ஹோட்டலில் கொண்டு வந்து விட்டு சென்றார்'' என்று கூறியிருந்தார்.
இதுபற்றி உதய்ப்பூர் எஸ்பி யோகேஷ் கோயல் கூறுகையில், ‛‛பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு மருத்துவ சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரிடம் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றுள்ளோம். குற்றச்சாட்டுக்கு உள்ளான நபர் தலைமறைவாக உள்ளார். அவரை தேடும் பணி நடந்து வருகிறது. விரைவில் பிடித்து விடுவாம்'' என்றார்.
-
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications