மணிப்பூரில் 3-வது மாதமாக நீடிக்கும் வன்முறை: ஒருவர் சுட்டுக் கொலை- 15 வீடுகள் தீக்கிரை
இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 3-வது மாதமாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. மணிப்பூரில் மேலும் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். 15 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக் குழுக்களிடையேயான மோதல் நாட்டில் மிகப் பெரும் அரசியல் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை எதிர்க்கட்சிகள் முழுமையாக முடக்கி உள்ளன.

மணிப்பூர் வன்முறையை மத்திய அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. இந்த விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி அறிக்கை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் வலியுறுத்தியதும் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ளன.
மணிப்பூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றமும் கடுமை காட்டி வருகிறது. மணிப்பூர் மாநில அரசு செயலிழந்துவிட்டதாகவும் சாடி இருக்கிறது. மணிப்பூர் மாநில வன்முறைகளில் சுமார் 200க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களிடையேயும் மோதல் போக்கை மணிப்பூர் வன்முறை அதிகரித்து வருகிறது. மணிப்பூர் வன்முறைகளின் பின்னணியில் சீனாவின் கை இருப்பதாக பாஜக உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. மியான்மர் வழியாக சீனாதான் மணிப்பூர் வன்முறையாளர்களுக்கு ஆயுதங்கள் தருகின்றன என்பதும் ஒரு குற்றச்சாட்டு.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளன. இம்பால் மேற்கு மாவட்டத்தில் நிகழ்ந்த புதிய வன்முறை சம்பவங்களில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 15 வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications