For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கேரளாவில் 10 மாதங்களில் 270 யானைகள் மரணம்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்த்துக்கு உட்பட்ட வனப்பகுதிகளில் கடந்த பத்து மாதங்களில் மட்டும் 270 யானைகள் உயிரிழந்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

தந்தத்துக்காக கொல்லப்பட்ட யானைகளைத் தவிர்த்து பிளாஸ்டிக் உறைகள் போன்ற பொருட்களை தின்றதாலும், மின்வேலியில் அடிப்பட்டு சில யானைகள் பலியானதாகவும் கேரள மாநில வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 From last 10 month 270 Elephants are died in Kerala

மாநிலம் முழுவதும் கடந்த 2009-10-ல் 46 யானைகளின் உடல்களும், 2010-11-ல் 68 யானைகளின் பிரேதங்களும், 2011-12-ல் 53 யானைகளின் உடல்களும், 2012-13-ல் 47 யானைகளின் உடல்களும், 2013-14 ஆண்டுகளில் 35 யானைகளின் உடல்களும்கண்டெடுக்கப்பட்டன.கடந்த 2013-14 ஆண்டுகளில் அருகிலுள்ள வால்பாறை, அதிரப்பள்ளி, வழச்சல், இடமலியார், பூயம்குட்டி, இடுக்கு, மூனாறு வனப்பகுதிகளில் மட்டும் கடந்த பத்து மாதங்களில் 125 யானைகள் உரிரிழந்த நிலையில் பிரேதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த 2014-15 ஆண்டின் முதல் பத்து மாதங்களில் மட்டும் இதுவரை 270 யானைகளின் உடல்கள் கிடைத்துள்ளதாக கேரள வனப்பாதுகாப்பு துறையின் கூடுதல் முதன்மை மேற்பார்வையாளர் தெரிவித்துள்ளார்.

English summary
270 Elephants are died in Kerala forest within last 10 months , official said
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X