இந்தியாவிற்கு தேவை தானியங்கள்... துப்பாக்கிகள் அல்ல: எம்.எஸ். சுவாமிநாதன்
அகோலா: இந்தியாவிற்கு தேவை தானியங்களை சேமிப்பது தான், துப்பாக்கிகளை குவிப்பதல்ல எனக் கருத்துத் தெரிவித்துள்ளார் விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன்.
நேற்று மகாராஷ்டிரா மாநிலம் அகோலாவிலுள்ள டாக்டர். பஞ்சாப்ராவ் தேஷ்முக் கிஷி வித்யாபீட விவசாய பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் இந்திய பசுமை புரட்சியின் தந்தை எனப் போற்றப் படும் விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் கலந்துகொண்டார்.
அப்போது, மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:-

புரியாத புதிர்....
விவசாய உற்பத்தியில் நாட்டில் போதுமான முன்னேற்றமிருந்தும், இந்தியாவில் பரவலான ஊட்டச்சத்து குறைபாடுகள் அதிகரித்து இருப்பது புரியாத புதிராக உள்ளது. போதுமான உணவு பற்றாக்குறையையும் தாண்டி பட்டினி கிடப்போர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

தொடர் பட்டினி....
ஊட்டச்சத்து குறைபாட்டால், மக்கள் தொடர் பட்டினிக்கு ஆளாக்கப்படுகிறார்கள். சிலநேரங்களில் நோய்வாய்பட்ட மனிதர்களால் நுண்ணூட்டச்சத்துக்களை ஏற்கமுடியாதபடி உடல் பலஹீனம் அடைந்து விடுகிறது.

தானிய சேமிப்பு....
எனவே வருங்கால இந்தியாவிற்கு தேவை, துப்பாக்கிகளை குவித்துகொண்டிருப்பதல்ல. மிதமான உணவுதானியங்களே சேமிப்பதே. தேசிய உணவுப்பாதுகாப்பு சட்டம் கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த பிறகு, இந்திய விவசாயத்திற்கு சட்டப்பூர்வமான பொறுப்புகள் அதிகரித்துள்ளன.

தேசிய உணவுப்பாதுகாப்புச் சட்டம்...
மிகப்பெரிய மக்கள் தொகையை கொண்ட நமது தேசத்திற்கு தேவையான உணவை வழங்க இந்த சட்டமானது அரசை வலியுறுத்துகிறது' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications