அமைச்சர் நிதின் கட்கரி மகள் திருமணம்.. 50 தனி விமானங்களில் விவிஐபிக்கள்... திணறும் நாக்பூர்
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் மகள் திருமணத்திற்கு 50 தனி விமானங்களில் விவிஐபிக்கள் நாக்பூருக்கு செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
நாக்பூர்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் மகள் திருமண விழாவில் பங்கேற்க இந்தியாவின் உள்ள புள்ளிகள் 50க்கும் மேற்பட்ட தனி விமானங்கள் மூலம் நாக்பூருக்கு செல்வார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் மகள் திருமணம் இன்று நாக்பூரில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவிஐபிக்கள் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூருக்கு செல்கின்றனர். மத்திய அமைச்சரின் வீட்டு திருமணத்திற்கு குறைந்தது 50 தனி விமானங்களில் விவிஐபிக்கள் நாக்பூருக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தலைவர் அமித்ஷா, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, தொழிலதிபர்கள் முகேஷ் அம்பானி, ரத்தன் டாடா, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்ரே, மகாராஷ்டிரா நிர்வாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே மற்றும் இதர மத்திய அமைச்சர்கள் என 10 ஆயிரத்திற்கும் விவிஐபி விருந்தினர்கள் இன்று மாலை நாக்பூரில் நடக்கும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் மகள் திருமணத்திற்கு தனி விமானத்தின் மூலம் செல்ல உள்ளனர்.
இதுதவிர, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, பிகார் முதல்வர் நிதிஷ் குமார், நடிகர்கள் ஹேம மாலினி, அமித்தாபச்சன், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தொழிலதிபர் குமாரமங்கலம் பிர்லா என பல்வேறு முக்கிய புள்ளிகளும் திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
மத்திய அமைச்சர் நிதின் கட்கரியின் மகள் கெட்கிக்கும் அமெரிக்காவில் செயல்பட்டு வரும் பேஸ்புக் நிறுவனத்தில் பணிபுரியும் ஆதித்யாவிற்கும் நாக்பூரில் உள்ள வார்தா சாலையில் உள்ள மண்டபத்தில் இன்று மாலை திருமண விழா நடைபெற உள்ளது.
நிதின் கட்கரி பாஜகவின் தலைவராக இருந்த போது, 2010 ஆண்டு டிசம்பர் மாதம் அவரது முத்த மகன் நிகிலுக்கு நாக்பூரில் திருமணம் நடைபெற்றது. அப்போதும், இதே போன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாக்பூருக்கு விவிஐபிக்கள் படைஎடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல்












Click it and Unblock the Notifications