மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் நகருக்கு சென்ற அதானி! இஸ்கான் அமைப்புடன் இணைந்து சேவை!
பிரயாக்ராஜ்: இன்று ஜனவரி 21ம் தேதி அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி, மகா கும்பமேளா நடைபெறும் பிரயாக்ராஜ் நகருக்கு சென்றார். அவரது பயணம் என்பது ஒற்றுமை, தூய்மை மற்றும் சேவைக்கான அவரது அர்ப்பணிப்பை அடையாளப்படுத்துவதாக இருக்கிறது. மேலும், மனித குலத்திற்குச் செய்யும் சேவையின் ஒரு வழியான ஆன்மீகத்தின் மீது அவர் வைத்துள்ள நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது.
அதானி முதலில் மகா கும்பமேளா வளாகத்தில் உள்ள இஸ்கான் சேவை முகாமிற்குச் சென்றார். இங்கு தான் அதானி குழுமம் இஸ்கான் அமைப்புடன் இணைந்து "மகாபிரசாத் சேவா" மூலம் தினமும் ஒரு லட்சம் பக்தர்களுக்கு இலவசமான மற்றும் தரமான உணவை வழங்கி வருகிறது. மகாபிரசாத் தயாரிக்கப்படும் சமையலறைக்கு நேரில் சென்று பார்வையிட்ட அதானி, பக்தர்களுக்குச் சேவை செய்வது கங்கை அன்னைக்கே நேரடியாகச் சேவை செய்வது போன்றது என்றும் குறிப்பிட்டார். தூய்மையான இதயத்துடன் சேவை செய்வது, நேரடியாகக் கடவுளைச் சென்றடையும் என்றும் அவர் கூறினார்.

அங்கிருந்து நேரடியாகக் கங்கை, யமுனை மற்றும் புராண சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்திற்குக் கவுதம் அதானி சென்றார். நமது புராணங்களுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ள இந்த திரிவேணி சங்கமம், பண்டைக் காலத்தில் நதிகள் கடலில் கலக்கும்போது தேன் துளிகள் விழுந்த இடமாக நம்பப்படுகிறது. இந்த புனித தளத்தில் அதானி தனது குடும்பம் மற்றும் நாட்டு மக்கள் நலமாக இருக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்தார்.
'தீர்த்ராஜ்' என்று அழைக்கப்படும் பிரயாக்ராஜ், ஆன்மீக ரீதியாக மட்டுமின்றி வரலாற்று ரீதியாகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. நகரின் ஆன்மீக பாரம்பரியத்தின் மீதான மரியாதையை வெளிப்படுத்தும் விதமாக, அங்குள்ள இந்தியாவின் 16 புகழ்பெற்ற அனுமான் கோவில்களில் ஒன்றான புகழ்பெற்ற லெட் அனுமான் கோவிலுக்குச் சென்று அதானி பிரார்த்தனை செய்தார்.
">#WATCH | Uttar Pradesh: Adani Group Chairman, Gautam Adani arrives in Prayagraj to attend #MahaKumbh2025#WATCH | Uttar Pradesh: Adani Group Chairman, Gautam Adani arrives in Prayagraj to attend #MahaKumbh2025
— ANI (@ANI) January 21, 2025
"I am very excited, " says Adani Group Chairman, Gautam Adani pic.twitter.com/ZXtsZxjvpJ
"I am very excited, " says Adani Group Chairman, Gautam Adani pic.twitter.com/ZXtsZxjvpJ — ANI (@ANI) January 21, 2025
மேலும், கவுதம் அதானி மகா கும்பமேளாவில் ஒரு கோடி இலவச ஆர்த்தி சங்க்ரா புத்தகங்களை விநியோகிக்கும் கீதா பிரஸ் உள்ள இடத்திற்கும் நேரில் சென்றார். சனாதன இலக்கியத்திற்கு கீதா பிரஸ் செய்து வரும் நூற்றாண்டு சேவை மற்றும் இந்தியக் கலாச்சாரம் & ஆன்மீகத்திற்கு அதன் இணையற்ற பங்களிப்புகளை அதானி பாராட்டினார்.
பரந்து விரிந்த கும்பமேளா பகுதியின் தூய்மையைப் பராமரித்து வரும் தூய்மை பணியாளர்களையும் அதானி நேரில் சந்தித்தார். அவர்களின் அயராத உழைப்பை பாராட்டிய அதானி, லட்சக்கணக்கான பக்தர்கள் வந்தாலும், மலைப்பாதைகள் & சாலைகள் தூய்மையாக வைத்திருக்கும் பணிக்காக அவர்களைப் பாராட்டினார்.

கும்பமேளாவில் பக்தர்களின் வசதிக்காக முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறு குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்குச் செல்ல கோல்ஃப் வண்டிகள் உள்ளிட்ட ஏற்பாடுகளை அதானி குழுமம் செய்துள்ளது. மேலும், பகவத்கீதையின் சாரத்தை மக்களிடையே பரப்பும் வகையில் கீதா சாரத்தின் ஐந்து லட்சம் புத்தகங்களும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுகிறது.
பக்தர்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் அதானி குழுமத்தின் இலவச மஹாபிரசாத் சேவை, ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை தொடரும். இந்த காலகட்டத்தில் 50 லட்சம் பக்தர்களுக்கு இலவச உணவு வழங்கப்பட உள்ளது.. இதற்காக இஸ்கான் அமைப்பு உணவு தயாரிப்பதற்காக இரண்டு பெரிய சமையலறைகளை அமைத்துள்ளது. மகா கும்பமேளா நடக்கும் பகுதியில் 40 இடங்களில் இருந்து உணவு விநியோகிக்கப்பட உள்ளது.
மகா கும்பமேளா என்பது இந்தியக் கலாச்சாரத்தின் பெரிய யாகம் என்று குறிப்பிட்ட அதானி, இங்குச் சேவை என்பது மிகப் பெரிய பாக்கியம் என குறிப்பிட்டார். இந்தியாவின் கலாச்சார மற்றும் ஆன்மீக நெறிமுறைகளை ஆதரிப்பதில் அவரது அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கும் வகையிலும் அவரது பக்தி மற்றும் சேவையை எடுத்துக்காட்டும் வகையிலும் இந்த பயணம் அமைந்துள்ளது.
மகா கும்பமேளாவில் மகாபிரசாத் சேவா, கீதா பிரஸ் மற்றும் தூய்மையைப் பேணுவதற்கான முயற்சிகளை அதானி குழுமம் எடுத்துள்ளது. அதானி குழுமம் இதன் மூலம் ஆன்மீக மற்றும் மக்கள் சேவைக்கான மகா கும்பமேளாவின் சாரத்தை வலுப்படுத்துகிறது.












Click it and Unblock the Notifications