இன்னொரு சரத் பவார்? 20 நாளில் தனிக் கட்சி தொடங்கும் குலாம் நபி ஆசாத்- காஷ்மீர் முதல்வர் வேட்பாளர்!
ஶ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் அடுத்த 20 நாட்களில் தனிக் கட்சி தொடங்க உள்ளதாகவும் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் அவர்தான் என்றும் அம்மாநில முன்னாள் அமைச்சர் ஜி.எம். சரூரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் குலாம் நபி ஆசாத். காங்கிரஸ் மேலிடத்தின் மிகவும் நம்பிக்கைக்குரிய வலதுகரமாக இருந்தார். மத்திய அமைச்சர் பதவிகளை வகித்தார். கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் மேலிடம் மீது கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தார் குலாம் நபி ஆசாத்.

ஜி23 தலைவர்கள்
காங்கிரஸ் கட்சியை உயிர்ப்பிக்க கட்சி கட்டமைப்பில் சீரமைப்பு தேவை என்பது குலாம் நபி ஆசாத்தின் நிலைப்பாடு. இதேபோன்ற ஒத்த கருத்துடைய 23 மூத்த தலைவர்கள் இணைந்து காங்கிரஸ் மேலிடத்துக்கு கடிதம் அனுப்பினர். கட்சியின் தலைமை முதல் அடிமட்டம் வரை மாற்றம் தேவை என்பது இந்த ஜி23 எனப்படும் கலகக் குரல் தலைவர்களின் கோரிக்கை.

காங்கிரஸுக்கு குட்பை
இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடம் அக்கறையுடன் பரிசீலனை செய்யவில்லை. இதனால் காங்கிரஸ் கட்சிக்கு மூத்த தலைவர்கள் குட்பை சொல்லிவிட்டு வெளியேறுவது தொடர் நிகழ்வாகி வருகிறது. இந்தப் பட்டியலில் அண்மையில் குலாம் நபி ஆசாத்தும் இணைந்தார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸின் ஜம்மு காஷ்மீர் முகமாக இருந்த குலாம் நபி ஆசாத் அக்கட்சியில் இருந்து முழுவதுமாக விலகுவதாக அறிவித்தார்.

ராகுல் மீது குற்றச்சாட்டு
காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய குலாம் நபி ஆசாத், ராகுல் காந்தி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார். காங்கிரஸின் இந்த பேரழிவுக்கு காரணமே ராகுல் காந்திதான்; சீனியர்களுடன் ஆலோசனை நடத்தும் போக்கையே ராகுல் காந்தி கைவிட்டு விட்டார்; இதனால் ராகுலின் பி.ஏ. கூட காங்கிரஸ் தொடர்பான முடிவெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது என குமுறியிருந்தார் குலாம் நபி ஆசாத்.

தனிக்கட்சி தொடங்குகிறார்
குலாம் நபி ஆசாத்தை தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் காங்கிரஸ் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்து வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் ஒட்டுமொத்த காங்கிரஸும் குலாம் நபி ஆசாத் பின்னால் அணிவகுத்து நிற்கிறது. இந்நிலையில் குலாம் நபி ஆசாத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஜம்மு காஷ்மீர் முன்னாள் அமைச்சர் ஜி.எம்.சரூரி கூறியதாவது: குலாம் நபி ஆசாத் அடுத்த 20 நாட்களில் தனிக் கட்சி ஒன்றை தொடங்க உள்ளார். குலாம் நபி ஆசாத், தேசிய கட்சியைத்தான் தொடங்குகிறார். இருந்த போதும் ஜம்மு காஷ்மீரை மையமாக வைத்து அரசியல் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்வார். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச சட்டசபைக்கு தேர்தல் நடைபெறும் நிலையில் முதல்வர் வேட்பாளராக குலாம் நபி ஆசாத் முன்னிறுத்தப்படுவார். இவ்வாறு சரூரி கூறினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய சரத் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியை உருவாக்கினார். தற்போது அவரது பாணியில் குலாம்நபி ஆசாத்தும் தனி கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளார்.
-
கர்நாடகா முதல்வராக தேர்வானார் டிகே சிவக்குமார்.. காங்., எம்எல்ஏக்கள் ஆதரவு.. பதவியேற்பு எப்போது? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications