For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் ஜி.சி முர்மு- புதிய ஆளுநரானார் மனோஜ் சின்ஹா

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணை நிலை ஆளுநர் என்ற பெயரைப் பெற்ற கிரிஷ் சந்திரா மர்மு ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவை குடியரசுத்தலைவர் ஏற்றுக்கொண்டார். புதிய துணை நிலை ஆளுநராக மனோ

Google Oneindia Tamil News

ஸ்ரீநகர்: காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக இருந்த கிரிஷ் சந்திரா முர்மு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது பதவியை ஏற்றுக்கொண்ட குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஜம்மு காஷ்மீரின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹாவை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்தாண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி திரும்ப பெறப்பட்டது. அந்த மாநிலம் லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

Girish Chandra Murmu resigns Manoj Sinha appointed as new lieutenant governor of Jammu and Kashmir

லடாக் சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும், காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் செயல்பட்டுவரும் நிலையில், ஜம்மு காஷ்மீரின் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா முர்மு, அக்டோபர் 31ஆம் தேதி நியமிக்கப்பட்டார்.

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் முதல் துணை நிலை ஆளுநர் என்ற பெயரைப் பெற்ற கிரிஷ் சந்திரா முர்மு, 9 மாத பதவிக்காலத்திற்குப் பின்னர் நேற்று திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கிரிஷ் சந்திரா முர்மு 1985 குஜராத் கேடர் ஐஏஎஸ் அதிகாரியாவார். நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்த காலத்தில் அவரின், முதன்மை செயலாளராக இருந்தார்.
இந்த நிலையில் அவர் தனது பதவியை நேற்றிரவு ராஜினாமா செய்வதாக கூறி குடியரசுத்தலைவருக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

எஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இன்று கோவாக்சின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைஎஸ்ஆர்எம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இன்று கோவாக்சின் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனை

அவரது ராஜினாமாவை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். ஜம்மு காஷ்மீரின் புதிய துணை நிலை கவர்னராக மனோஜ் சின்ஹாவை நியமனம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் கிரீஷ் சந்திர முர்முவின் ராஜினாமாவை குடியரசுத்தலைவர் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, மனோஜ் சின்ஹாவை புதிய துணை நிலை ஆளுநராக நியமனம் செய்துள்ளார் என தெரிவித்துள்ளது.

English summary
President Ram Nath Kovind on Thursday appointed former Union minister Manoj Sinha as the next Lieutenant Governor of Jammu and Kashmir. He will replace Girish Chandra Murmu who resigned on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X