இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சியை தாருங்கள்... ஊழல்வாதிகளை சிறையில் தள்ளுவேன்... மோடி பேச்சு
ஹரியானா: இன்னும் 5 ஆண்டுகள் ஆட்சியை கொடுத்தால், ஊழல்வாதிகளை சிறைக்கம்பிகளை எண்ணவைப்பேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. 5 கட்டங்களாக வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ள நிலையில், 6-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்தது.
ஹரியானா மாநிலம் ரோதக்கில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, கடந்த, 2014ல், மக்கள் ஆதரவுடன் மத்தியில் அமைந்த, பா.ஜ.க அரசு, 5 ஆண்டுகளில், உலகளவில், இந்தியாவின் நன்மதிப்பை பெருமளவு உயர்த்தியுள்ளது என்று பெருமிதம் தெரிவித்தார்.

ஊழலை தடுத்தேன்
காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியலையும், ஊழலையும், தடுத்தேன். ஆனால், அவர்கள் அன்பு என்ற முகமூடி அணிந்து, என்னை தகாத வார்த்தைகளால் திட்டுகின்றனர். ஹிட்லர், முசோலினி, தாவூத் இப்ராஹிம் என்றெல்லாம் என்னை வசை பாடினர். அவர்களின் அன்பு அகராதியில் உள்ள சொற்களை, இங்கு சொல்கிறேன் என்றார்.

சிறையில் தள்ளுவேன்
மேலும், விவசாயிகளிடம் இருந்து நிலங்களை அபகரித்த, சோனியா மருமகன், ராபர்ட் வத்ரா, நடுக்கத்தில் உள்ளார். அவரை சிறைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை ஏற்கனவே எடுத்துவிட்டேன். உங்கள் ஆசியுடன், அடுத்த, ஐந்து ஆண்டுகளுக்குள், அவரை சிறையில் தள்ளுவேன்.

5 ஆண்டுகள் அதிகாரம்
ஏற்கனவே நாட்டை சூறையாடியவர்கள் ஜாமீனில் இருந்து விசாரணையை எதிர்கொண்டு வருகின்றனர். சட்டத்தை பயன்படுத்தி தப்பிக்க அவர்கள் முயற்சி செய்து வருகின்றனர். நீங்கள் எனக்கு வாக்களித்து இன்னும் 5 ஆண்டுகள் அதிகாரம் கொடுத்தால், அவர்களை சிறைக்கம்பிகளுக்கு பின்னால் தள்ளும் நிலையை உருவாக்குவேன் என்று பேசினார்.

கனவு தகர்ந்தது
நடந்து முடிந்துள்ள ஐந்து கட்ட தேர்தலுக்குப் பின், காங்கிரஸ் மற்றும் 'மெகா' கூட்டணி கட்சிகளின் ஆரவார கூச்சல் அடங்கி விட்டது; போட்டியில் இருந்தும் விலகி விட்டன. மத்தியில், கூட்டணி சேர்ந்தோ அல்லது தனியாகவோ அரசு அமைக்கலாம் என்ற, காங்கிரஸ் கட்சியின் கனவு தகர்ந்து விட்டது.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
தவெகவில் அதிமுக எம்எல்ஏக்கள்! போட்ட கண்டிஷன் என்னாச்சு? காங்கிரஸுக்கு ஸ்ரீநிதி கேள்வி -
ஒருவழியாக இறங்கி வந்த சித்தராமையா.. ஆனால் அடுத்த நொடியே வைத்த செக்! உச்சக்கட்ட டென்ஷனில் சிவக்குமார் -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
100 விஜய் வந்தாலும் மேகதாது அணையை தடுக்க முடியாது.. சவால் விட்ட கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ -
தவெகவை ஏன் எதிர்க்கிறீர்கள்? வாரிய பதவி கேட்டு வாங்குங்க! ஸ்ரீநிதிக்கு காங்கிரஸ் நிர்வாகி அட்வைஸ் -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
2 நாள் பயணமாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் விஜய்.. இன்று மோடியுடன் சந்திப்பு.. பக்காவாக ரெடியான மனு!












Click it and Unblock the Notifications