சுஷ்மா ஸ்வராஜ் நாளை இலங்கை பயணம்.. "கொள்ளையடிக்க" வருவதாக மாஜி அமைச்சர் பிரீஸ் கடும் தாக்கு!!
டெல்லி: மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நாளை இலங்கை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அவரது பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ், அந்நாட்டின் இயற்கை வளங்களை கொள்ளையடிக்கவே சுஷ்மா ஸ்வராஜ் வருகை தரப் போவதாக சாடியுள்ளார்.
தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்துவதற்காக சுஷ்மா ஸ்வராஜ் நாளை முதல் 2 நாள் பயணமாக இலங்கை செல்ல உள்ளார். கொழும்பில் நடைபெறும் 9-வது இலங்கை- இந்தியா கூட்டுக் குழு கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார்.

இக்கூட்டத்தில் பொருளாதார ஒத்துழைப்பு, கடல்சார் ஒத்துழைப்பு, கல்வி விவகாரங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். அடுத்ததாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவையும் சுஷ்மா ஸ்வராஜ் சந்திக்கிறார்.
இதன் பின்னர் 6-ந் தேதியன்று யாழ்ப்பாணத்துக்கு சுஷ்மா ஸ்வராஜ் செல்ல முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே சுஷ்மா ஸ்வராஜின் இலங்கை பயணத்துக்கு அந்நாட்டின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜி.எல். பீரிஸ், இலங்கையின் இயற்கை வளங்களை முழுமையாக கொள்ளையடித்துவிட்டுப் போவதற்கான சட்டப்பூர்வ அங்கீகாரத்தைப் பெறவே சுஷ்மா ஸ்வராஜ் இலங்கை வருகிறார்.
அவருடன் பல்வேறு வர்த்தக உடன்பாடுகளில் இலங்கை அரசு கையெழுத்திட உள்ளது. சுஷ்மா ஸ்வராஜை நேரில் சந்தித்து எதிர்ப்பு தெரிவிக்கவும் நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்றார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications