பெங்களூர், ஹைதராபாத் அலுவலகங்களில் ஆள் பலத்தை அதிகரிக்கும் கூகுள்!
டெல்லி: உலகின் முன்னணி நிறுவனமான கூகுளின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக சுந்தர் பிச்சை இந்தியாவில் இன்று முதல் 2 நாள் பயணம் மேற்கொள்கிறார்.
டெல்லியில் நடைபெற்ற Google for India என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இந்தியாவின் வளர்ச்சியில் கூகுள் அளிக்கவுள்ள பங்கு குறித்து உரையாற்றினார்.
1972ம் ஆண்டு சென்னையில் பிறந்த சுந்தர் பிச்சை, ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் பி.எச்.டி படித்தார். பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய அவர் தற்போது கூகுள் தலைமை செயல் அதிகாரி பொறுப்புக்கு வந்துள்ளார்.

முதல் பயணம்
கடந்த செப்டம்பர் மாதம் அமெரிக்கா சென்ற பிரதமர் மோடியை, சுந்தர் பிச்சை சந்தித்து பேசினார். கடந்த ஆண்டு (2014) டெல்லி வந்த அவர் ஆண்ட்ராய்டு செல்போன் மென்பொருளை அறிமுகம் செய்தார். அதன்பிறகு தற்போது தலைமை செயல் அதிகாரி என்ற டாப் பதவியுடன் முதல் முறையாக டெல்லி வந்துள்ளார் சுந்தர் பிச்சை.

இந்தியாவுக்கான கூகுள்
உலகின் முன்னணி நிறுவனமான கூகுளின் தலைமை அதிகாரியாக பொறுப்பேற்ற பிறகு முதல்முறையாக சுந்தர் பிச்சை இந்தியாவில் இன்று முதல் 2 நாள் பயணம் மேற்கொள்கிறார். டெல்லியில் நடைபெற்ற Google for India என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், இந்தியாவின் வளர்ச்சியில் கூகுள் அளிக்கவுள்ள பங்கு குறித்து உரையாற்றினார்.

பிரணாப், மோடியுடன் சந்திப்பு
நாளை (வியாழக்கிழமை) காலை ஸ்ரீராம் கல்லூரி மாணவர்களுடன் சுந்தர் பிச்சை கலந்துரையாடுகிறார். பிறகு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசுகிறார். மாலை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சுந்தர் பிச்சை சந்திக்கிறார். அவருக்கு ஜனாதிபதி தேநீர் விருந்து அளிக்கிறார்.

இலவச வைஃபை
இன்றைய Google for India நிகழ்ச்சியில் சுந்தர் பிச்சை பேசியதாவது: இந்தியாவின் 100 ரயில் நிலையங்களில் அடுத்த ஆண்டு இறுதிக்குள் இலவச வைஃவை வசதியை ரயில்வேயுடன் இணைந்து கூகுள் அளிக்கும். ரயில் டெல்லுடன் இணைந்து, வரும் ஜனவரி மாதத்திற்குள் மும்பை மத்திய ரயில் நிலையத்தை லைவாக பார்க்கும் வசதி செய்யப்படும்.

பெங்களூரில் கூடுதல் பணியாளர்
அனைத்து தரப்புக்கும் இணையதள பயன்பாடு சென்று சேர வேண்டும் என்பதே கூகுளின் நோக்கம். இந்தியாவில் கூகுள் தனது இன்ஜினியரிங் பணிகளை அதிகரிக்க உள்ளது. பெங்களூரிலுள்ள கூகுள் அலுவலகத்தில் கூடுதலாக பணியாளர்கள் சேர்க்கப்படுவார்கள்.

ஹைதராபாத்தில் கேம்பஸ்
ஹைதராபாத்தில் புதிதாக பெரிய அளவிலான கூகுள் அலுவலகம் திறக்கப்படும். இதனால் கூடுதல் பணியாளர்கள் சேர்க்கப்படுவார்கள். பெண்களுக்கு இணையதள பயன்பாடு பரிட்சையத்தை ஏற்படுத்துவதற்காக, சைக்கிள் புரோக்ராம் நடத்துகிறோம். 3 லட்சம் கிராமங்களை இந்த திட்டத்தில் இணைக்க உள்ளோம் என்றார் சுந்தர் பிச்சை.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications