For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல், டீசல் விலை... இதெல்லாம் அடுக்குமா அரசுகளே!

By Shankar
Google Oneindia Tamil News

இன்றைய கச்சா எண்ணெய் விலைப்படி பெட்ரோல் லிட்டர் ரூ 23க்குத் தரலாம், அரசுகள் மனசு வைத்தால் அது தாராளமாக முடியும்.

ஆனால் மத்திய மாநில அரசுகளின் வரிகளாகவே ரூ 51 தண்டமாக அழுகிறோம். உலகில் வேறு எந்த நாட்டிலும் இல்லாத பெட்ரோலிய கொடுமை இது!

govt-loots-the-public-the-name-petro-products

ஜூலை 3, 2008-ம் தேதி ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 145 டாலர். இதுதான் இதுவரை உச்ச விலை. அந்த தேதிக்கு சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 55.07. டீசல் விலை ரூ 37.13.

இன்று ஒரு பேரல் கச்சா விலை 4 டாலர். ஆனால் பெட்ரோல் விலை ரூ 61. டீசல் விலை ரூ 48.

ஒரு பேரல் என்பது 160 லிட்டர் கச்சா எண்ணெய். ஒரு பேரல் கச்சாவிலிருந்து 21 லிட்டர் பெட்ரோல், 80 லிட்டர் டீசல், 6.5 கிலோ எரிவாயு எடுக்கப்படுகிறது. இவை போக மீதமிருப்பது மண்ணெண்ணெய், நாப்தா, டர்பன்டைன், மசகு ஆயில், சல்பர் போன்ற உபரிப் பொருள்களாக எடுக்கப்படுகின்றன. இவை பெட்ரோல், டீசலை விட அதிக விலைக்குப் போகின்றன. இது இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளின் கணக்கு. நாட்டுக்கு நாடு இந்த அளவு மாறுபடும்.

அதாவது வெறும் ரூ 2520 கொடுத்து வாங்கப்படும் ஒரு பேரல் கச்சாவிலிருந்து கிடைக்கும் பொருட்கள் மூலம் பெறப்படும் வருவாய்...

21 லிட்டர் பெட்ரோல் * 61.02 = 1281.42

80 லிட்டர் டீசல் * 48.00 = 3840.00

6.5 கிலோ எல்பிஜி * 405.32 = 2634.45

இதரப் பொருட்கள் மதிப்பு: =2000.00

மொத்தம் ரூ = 9755. 87.

சுத்திகரிப்புச் செலவு:

ஒரு பேரலுக்கு (லிட்டர் பெட்ரோலுக்கு ரூ 6, டீசலுக்கு 4.6) ரூ = 494

சுத்திகரிப்புச் செலவைக் கழித்துவிட்டால் ஒரு பேரலிருந்து பெறப்படும் பெட்ரோல், டீசல் மற்றும் உப பொருள்கள் மூலம் மொத்தம்: ரூ 9261.87 கிடைக்கிறது (இப்போதுள்ள விலைப்படி). மூலப் பொருளான கச்சா எண்ணெய் விலையைக் கழித்துவிட்டால் ரூ 6741.87 லாபமாகக் கிடைக்கிறது.

இதில் 45 - 50 சதவீதம்தான் பெட்ரோல் / டீசலின் விலை. மீதி 50 - 55 சதவீதம் மத்திய மாநில அரசுகள் விதிக்கும் வரிகள் மூலம் வருவது.

உதாரணத்துக்கு.. பெட்ரோல் விலையில் உள்ள வரிகள்:

சுங்கவரி 4 சதவீதம்
ஆயத் தீர்வை 25 சதவீதம்
வாட் 17 சதவீதம்
டீலர் கமிஷன் 2 சதவீதம்
கல்வி செஸ் 2 சதவீதம்
சாலை வரி 2 சதவீதம்

பெட்ரோல் விலையில் 55 சதவீதம் வரிகள்தான்.

டீசலுக்கான வரிகள்:

சுங்க வரி 7 சதவீதம்
ஆயத் தீர்வை 13 சதவீதம்
வாட் - 12 சதவீதம்
டீலர் கமிஷன் 2 சதவீதம்
கல்வி செஸ் 2 சதவீதம்

டீசல் விலையில் 39 சதவீதம் வரிகள். சில மாநிலங்களில் ஆக்ட்ராய் எனப்படும் உள்நுழைவு வரி விதிப்பார்கள். அங்கே விலை இன்னும் அதிகம்.

எவ்வளவுக்கு விற்கலாம்?

சுத்திகரிப்புச் செலவுடன் சேர்த்து ஒருபேரல் கச்சா விலை இன்றைய நிலவரப்படி 3014 ரூபாய்தான்.

இதில் 21 லிட்டர் பெட்ரோலுக்கு தோராயமாக ரூ 22 என்ற விலை நிர்ணயித்தாலும் ரூ 462 -ம்,

80 லிட்டர் டீசலுக்கு, லிட்டர் ரூ 18 என விலை வைத்தாலும் ரூ 1440-ம்,

ஒரு கிலோ எரிவாயுக்கு ரூ 300 என போட்டாலும் ரூ 1950-ம் கிடைக்கும்.

இதுவே மொத்தம் ரூ 3852 வரை வருகிறது. வாங்கியதை விட ரூ 850 வரை லாபம், பேரலுக்கு.

ஆனால்,

இவர்கள் எப்படி விலை நிர்ணயித்திருக்கிறார்கள் பாருங்கள்.

பெட்ரோல் விலை ரூ 32 + வரிகள் (லிட்டருக்கு ரூ 10 அதிகம்).

டீசல் விலை ரூ 28 + வரிகள் (லிட்டருக்கு ரூ 10 அதிகம்).

ஒருலிட்டர் பெட்ரோல் / டீசலுக்கு எண்ணெய் நிறுவனமே ரூ 10 கூடுதலாக வைத்து விற்கிறது. அதன் பிறகு கிட்டத்தட்ட 50 சதவீதம் பல்வேறு வரிகளை விதிக்கின்றன மத்திய மாநில அரசுகள்.

அனைத்து வரிகளையுமே சேர்த்து ரூ 30-க்கு பெட்ரோலை, ரூ 22-க்கு டீசலை விற்றாலுமே எண்ணெய் நிறுவனங்களுக்கும் லாபம், அரசுகளுக்கும் போதிய வருமானம் கிடைக்க வாய்ப்பிருந்தும், கண்மூடித்தனமாக Hyper Price என்பார்களே, அந்த உச்சபட்ச விலையை நிர்ணயித்து மக்களின் வருமானத்தை உறிஞ்சுகின்றன எண்ணெய் நிறுவனங்களும் அரசுகளும்.

குறிப்பு: இரு ஆண்டுகளுக்கு முன் நான் எழுதிய ஒரு கட்டுரை இது. இந்த இரு ஆண்டுகளில் கச்சா எண்ணெய் விலை பெரிதாக உயர்ந்துவிடவில்லை. இன்னமும் அமெரிக்காவில் ஒரு காலன் (3.75 லிட்டர்) பெட்ரோல் விலை 2 டாலருக்குள்தான் விற்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் அடுத்தடுத்து வரி உயர்வுகள். நேற்று முன் தினம் மாநில அரசு வாட் வரியை உயர்த்தியதில் பெட்ரோல் விலை லிட்டர் ரூ 74.47 ஆகவும், டீசல் விலை ரூ 62.63 ஆகவும் உயர்ந்துவிட்டது.

English summary
An article on how Indian Union and state govts looting public in the name of selling petro products.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X