ஆண்ட்டி லவ்.. பேரனை திருமணம் செய்த பாட்டி.. தாத்தாவுக்கு தலையே சுத்திடுச்சு.. அடுத்து நடந்த டுவிஸ்ட்
கான்பூர்: குடும்ப உறவுகள் என்பது ஒரு மெல்லிசான நூல் போன்றது..ஒருமுறை அறுந்தால் மறுபடியும் இணைப்பது கடினமான விஷயமாக மாறிவிடும். இதில், ஆண்கள், பெண்களுக்கிடையேயான உறவைப் பேணி பராமரிப்பது அதைவிட சவாலானது. இப்படியான குடும்ப உறவுகள் சமீபகாலமாகவே ஆரோக்கியமில்லாமல் இருந்து வருகிறது.. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் அடிக்கடி நடந்து வருவதையெல்லாம் பார்த்தால், பொதுமக்களுக்கு அதிர்ச்சிதான் மேலிடுகிறது. இதோ மீண்டும் ஒரு கொடுமை நடந்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் அம்பேத்கர் நகரில் வசித்து வருபவர் சந்திரசேகர். இவருடைய மனைவி இந்திராவதிக்கு 50 வயதாகிறது.. இந்த தம்பதிக்கு 2 மகன்கள் மற்றும் 2 மகள்கள் இருக்கிறார்கள்.. இவர்களுடைய வீட்டுக்கு பக்கத்தில் ஆசாத் என்ற இளைஞர் வசித்து வந்துள்ளார்.. இவருக்கு 30 வயதாகிறது..

சிரித்து சிரித்து பேசிய பாட்டி
இந்நிலையில், ஆசாத்துடன் இந்திராவதி சிரித்து சிரித்து பேசிவந்தாராம்.. இதனால் இருவருக்குள்ளான பழக்கம் அதிகரித்துள்ளது.. ஒருகட்டத்தில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். ஆரம்பத்தில் இவர்கள் இருவரும் பழகுவதை அக்கம்பக்கத்தினர் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. வயது வித்தியாசம் அதிகம் என்பதுடன், இந்திராவதிக்கு, உறவுமுறைப்படி ஆசாத் பேரன் ஆவார்.
இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு, பாட்டியும், பேரனும் ரகசிய சந்திப்பு நடத்தியிருக்கிறார்கள்..இது இந்திராவதியின் கணவர் சந்திரசேகருக்கு சந்தேகத்தை உண்டுபண்ணியது.. பிறகு இருவருக்குள்ளும் தகாத உறவு இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பிறகு இருவரையுமே கண்டித்தார். ஆனால், இருவரும் தங்கள் உறவை கைவிடும் முடிவில் இல்லை.
இருவருமே மேஜர்
இதனால் வேறு வழியின்றி சந்திரசேகர் போலீசுக்கு சென்று புகார் தந்தார்.. ஆனால், பாட்டி, பேரன் இருவருமே மேஜர் அதாவது, இருவரும் வயது வந்த பெரியவர்கள் என்றும், தங்களது உறவு குறித்து முடிவு செய்யும் உரிமை கொண்டவர்கள் என்றும் சொல்லி அந்த புகாரை பதிவு செய்ய போலீசார் மறுத்து விட்டனர்.
போலீஸ் வரை விவகாரம் சென்றுவிட்டதால், அனைவரும் சேர்ந்து தம்மை பிரித்துவிடுவார்கள் என்று பாட்டியும், பேரனும், வீட்டை விட்டு ஓடிப்போய், கோவிந்த் சாகிப் கோவிலில் திருமணமும் செய்து கொண்டனர்.. இந்திராவதிக்கு ஆசாத் மாலையிட்டார்.. இருவரும் 7 முறை அக்னியை வலம் வந்து, உறுதிமொழியை ஏற்று கொண்டனர். பிறகு ஆசாத், இந்திராவதியின் நெற்றியில் குங்குமம் வைத்து மனைவியாக ஏற்று கொண்டார்.
சந்திரசேகர் எடுத்த முடிவு
விஷயம் இத்துடன் முடியவில்லை.. கணவரும், அவரது குடும்பத்தினரும் உயிருடன் இருக்கும்வரை தங்களுக்கு நிம்மதி இருக்காது என்று நினைத்து, அவர்களை கொலை செய்ய முடிவு செய்தார் இந்திராவதி.. சாப்பாட்டில் விஷம் வைத்து கொல்ல தயாரானார்.. ஆனால், அதற்குள் இந்த விஷயம் தெரிந்து அதிர்ந்து போன சந்திரசேகர், இந்திராவதிக்கு "காரியம்" செய்தார்.. அதாவது, இறந்தவர்களுக்கு 13-வது நாள் செய்யும் சடங்கை நடத்த முடிவு செய்துள்ளார்..
பாட்டி பேரனை திருமணம் செய்து கொண்டுள்ளதும், உயிருடனுள்ள மனைவிக்கு கணவன் காரியம் நடத்த தயாராகி வருவதும் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை தந்து கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
