ராஜ்யசபாவில் ஒரு மனதாக நிறைவேறியது ஜி.எஸ்.டி மசோதா! ஆதரவாக 203 உறுப்பினர்கள் வாக்களிப்பு
டெல்லி: சரக்கு மற்றும் சேவை மசோதா ராஜ்யசபாவில் ஒரு மனதாக நிறைவேறியது. கடந்த 25 வருடத்தில் மத்திய அரசு ஒன்று எடுத்த மிகப்பெரிய பொருளாதார முன்நகர்வாக இது வர்ணிக்கப்படுகிறது. முன்னதாக அதிமுக உறுப்பினர்கள் வாக்கெடுப்பை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
லோக்சபாவில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட ஜிஎஸ்டி மசோதாவை, ராஜ்யசபாவில் இன்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி அறிமுகம் செய்து பேசினார். முன்னதாக காங்கிரஸ் அறிவுறுத்திய சில மாற்றங்களையும் அந்த மசோதாவில் மத்திய அரசு செய்திருந்தது.

இந்த மசோதா மீது முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், அதிமுகவின் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்ட பல கட்சி உறுப்பினர்களும் விவாதம் நடத்தி அரசுக்கு பல சலுகைகளை கொடுத்தனர். இதில் அதிமுக மட்டும், இந்த மசோதாவை எதிர்த்தது. திமுக சார்பில் பேசிய டி.கே.எஸ்.இளங்கோவன், மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
இரவு சுமார் 9.30 மணிவரை விவாதம் நடந்த நிலையில், மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 203 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதிமுக வெளிநடப்பு செய்தது. எனவே யாரும் எதிர்த்து வாக்களிக்கவில்லை என்பதால் ஜிஎஸ்டி மசோதா ஒரு மனதாக நிறைவேறியதாக அவை தலைவர் அறிவித்தார்.
ஜிஎஸ்டி சட்டத்தை அமல்படுத்த, அரசியல் சாசன பிரிவு 122ல் திருத்தம் செய்ய வேண்டியிருந்தது. எனவே ராஜ்யசபாவில் 3ல் 2 பங்கு உறுப்பினர் ஆதரவு ஆளும் கட்சிக்கு தேவைப்பட்டது. தற்போது அந்த ஆதரவு கிடைத்ததால் சட்டம் நிறைவேறியது.
ஜிஎஸ்டி சட்டம் ராஜ்யசபாவில் நிறைவேறியுள்ள நிலையில், அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களுக்கு லோக்சபாவில் ஒப்புதல் பெறப்பட்டு, குடியரசு தலைவரிடம் அனுப்பி வைக்கப்பட்டு அவரின் ஒப்புதல் பெறப்படும். பிறகு இந்த சட்டம் அமலுக்கு வரும். முன்னதாக, நாட்டிலுள்ள மொத்த மாநிலங்களில் குறைந்தபட்சம் பாதி மாநில சட்டசபையிலாவது இந்த சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கிடைக்க வேண்டியதும் அவசியம்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications