For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மோடி அலுவலக இன்டர்நெட் ஸ்பீட் எவ்வளவோன்னு தெரியுமா?

By Siva
Google Oneindia Tamil News

சென்னை: பிரதமர் அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் இன்டர்நெட் இணைப்பின் வேகம் 34 எம்.பி.பி.எஸ். என்பது தெரிய வந்துள்ளது.

ஆன்லைன்ஆர்டிஐ.காம் என்ற இணையதளத்தின் துணை நிறுவனரான வினோத் ரங்கநாதன் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் பிரதமர் அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் இன்டர்நெட்டின் வேகம் என்ன என்பதை தெரிவிக்குமாறு கோரி விண்ணப்பித்தார்.

இது குறித்து அவருக்கு அனுப்பப்பட்டுள்ள பதிலில் கூறியிருப்பதாவது,

Guess the internet speed at Prime Minister's Office?

பிரதமர் அலுவலக இன்டர்நெட்டின் வேகம் 34 எம்.பி.பி.எஸ். கிளையன்ட் கம்ப்யூட்டர் வின்டோஸ் 7/வின்டோஸ் 8 ஆகியவற்றில் வேலை செய்கிறது. சர்வர் வின்டோஸ் மற்றும் லினெக்ஸில் ஓடுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சராசரி இன்டர்நெட் இணைப்பின் வேகம் 2 எம்.பி.பி.எஸ். என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி ரங்கநாதன் கூறுகையில்,

நம் பிரதமர் 34 எம்.பி.பி.எஸ் வேக இன்டர்நெட்டை பயன்படுத்துவதில் தவறு இல்லை. ஒரு பிரதமராக அவருக்கு சிறப்பான இன்டர்நெட் இணைப்பு தேவை. அமெரிக்காவில் சாதாரண நபர்களுக்கு கூட கூகுள் பைபர் 1 ஜிபிஎஸ் வேக இன்டர்நெட் இணைப்பை அளிக்கிறது. இந்தியாவில் கொச்சியில் உள்ள ஒரு கிராமத்தில் 1ஜிபிபிஎஸ் இன்டர்நெட் சேவை உள்ளது. இது பிரதமர் அலுவலக இணைப்பை விட 30 மடங்கு அதிகம் என்றார்.

இந்தியாவில் சராசரியாக அதிகவேக இன்டர்நெட் இணைப்பு 14 எம்.பி.பி.எஸ். அதிலும் இந்தியாவில் இன்டர்நெட் பயன்படுத்துவோரில் 1.2 சதவீதம் பேரே 10 எம்.பி.பி.எஸ்.-ஐ விட அதிவேக இன்டர்நெட்டை பயன்படுத்துகிறார்கள்.

மோடி பிரதமர் ஆன பிறகு கொண்டு வரப்பட்ட கம்ப்யூட்டர் பற்றிய கேள்விக்கு, நீங்கள் கேட்ட தகவல் இல்லை என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் அலுவலகத்தில் ஹேக் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கையை தெரிவிக்கவும் பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது.

English summary
The speed of the internet used in Prime Minister's office is 34 MBPS while an an average internet connection speed in India is 2Mbps (megabytes per second).
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X