"குஜராத் பாலம் விபத்து வேதனை அளிக்கிறது".. முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

Subscribe to Oneindia Tamil

அகமதாபாத்: குஜராத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 130-க்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில், இந்த விபத்து வேதனை அளிப்பதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றை கடப்பதற்காக சுமார் 100 ஆண்டுகள் பழமையான கேபிள் பாலம் இருந்து வந்தது.

இந்த பாலத்தில் கடந்த 7 மாதங்களாக சீரமைப்பு பணி நடந்து வந்தது. இதையடுத்து குஜராத் புத்தாண்டு தினமான கடந்த 26-ஆம் தேதி இந்த கேபிள் பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.

அறுந்து விழுந்த கேபிள் பாலம்

அறுந்து விழுந்த கேபிள் பாலம்

பாலம் திறக்கப்பட்டு 4 நாட்களே ஆன நிலையில், விடுமுறை தினமான நேற்று இந்த பாலத்தில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமானோர் இந்த பாலத்தில் திரண்டிருந்தனர். சுமார் 300 பேர் அந்த பாலத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் திடீரென பாரம் தாங்காமல் அந்த கேபிள் பாலம் அறுந்து விழுந்தது. இதில் பாலத்தில் இருந்தவர்கள் கொத்தாக அப்படியே ஆற்றுக்குள் விழுந்தனர்.

 கொத்து கொத்தாக விழுந்தனர்

கொத்து கொத்தாக விழுந்தனர்

பெண்கள், குழந்தைகள் என நீச்சல் தெரியாதவர்கள் என பலரும் கொத்து கொத்தாக விழுந்து தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். பலரும் காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பினர். சிலர் பாலத்தில் தொங்கியபடி காப்பாற்றும் படி அபயக்குரல் எழுப்பினர். இதனால் ஆனந்த பூங்காவாக இருந்த அந்த பகுதி சிறிது நேரத்தில் அமைதியற்ற நிலைக்கு மாறியது. இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் அப்பகுதிக்கு தேசிய மீட்பு படையினர், ராணுவ வீரர்கள், போலீசார் அப்பகுதி மக்கள் என பலர் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 130-க்கும் மேற்பட்டோர் பலி

130-க்கும் மேற்பட்டோர் பலி

இதில் இதுவரை 130-க்கும் மேற்பட்டோர் பேர் பலியாகியுள்ளதாகவும்.. இன்னும் 100-க்கும் மேற்பட்டோர் ஆற்றில் மூழ்கி இருப்பதால் அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும்.. இதனால் பலி எண்னிக்கை மேலும் உயரும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் குஜராத் கேபிள் பால விபத்தில் உயிரிழ்ந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட் பதிவிட்டுள்ளார்.

விரைவில் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும்

விரைவில் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும்

அதில், "மோர்பி பாலம் அறுந்து விழுந்ததில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்து இருப்பது வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய விரும்புகிறேன். பாலம் அறுந்து விபத்தில் சிக்கி தவிப்பவர்களும் விரைவில் பாதுகாப்பாக மீட்கப்பட வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார். விபத்து குறித்த செய்தி அறிந்த சில மணி நேரங்களில் அதாவது நேற்று இரவே இரங்கல் தெரிவித்து ஸ்டாலின் இந்த பதிவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ராகுல் காந்தி இரங்கல்

ராகுல் காந்தி இரங்கல்

குஜராத் விபத்து தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்ட ட்விட் பதிவில், 'குஜராத்த்தின் மோர்பி நகரில் பாலம் விபத்துக்குள்ளான சம்பவம் மிகுந்த வருத்தமளிக்கிறது. இத்தகைய கடினமான நேரத்தில் உயிரிழந்தவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவிகளை செய்யவும், ஆற்றில் மூழ்கி காணாமல் போனவர்களை மீட்பதற்கும் காங்கிரஸ் தொண்டர்கள் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன்' என்று பதிவிட்டுள்ளார்.

மம்தா பானர்ஜி இரங்கல்

மம்தா பானர்ஜி இரங்கல்

இதேபோல் குஜராத் தொங்கு பாலம் விபத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட் பதிவில், ''குஜராத்தின் மோர்பி நகரத்தில் பாலம் அறுந்து விழுந்து விப்பத்துக்குள்ளானதில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்தத செய்தி என்னை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+