For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு.. நித்யானந்தாவுக்கு சிக்கல்? பின்னணி இதுதான்

Google Oneindia Tamil News

அகமதாபாத்: பாலியல் புகார், ஆட்கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளை எதிர்கொண்டுள்ள சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி இன்னும் தலைமறைவாகவே உள்ளார். கைலாசா என்னும் நாட்டை உருவாக்கி இருப்பதாக நித்யானந்தா தரப்பில் சொல்லப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நித்யானந்தாவுக்கு எதிரான வழக்கு ஒன்றில் உள்துறை அமைச்சகம் பதிலளிக்க குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டின் திருவண்ணாமலையை சேர்ந்தவர் நித்தியானந்தா. குறுகிய காலத்தில் புகழ் வெளிச்சம் அடைந்த சாமியார் நித்யானந்தா எந்த அளவுக்கு வேகமாக புகழ் அடைந்தாரோ அதே அளவுக்கு சர்ச்சைகளிலும் சிக்கினார்.

நடிகை ஒருவருடன் நெருக்கமாக இருந்த வீடியோ வெளியானதில் தொடங்கிய நித்யானந்தா மீதான சர்ச்சை அளவே இல்லாமல் நீண்டு கொண்டே சென்றது. நித்யானந்தா மீது மீது பாலியல் புகார் உள்பட ஆட்கடத்தல் உள்ளிட்ட புகார்கள் எழுந்தன.

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு - என்ன நடந்தது?காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு - என்ன நடந்தது?

கைலாசாவில் நித்யானந்தா

கைலாசாவில் நித்யானந்தா

கர்நாடகா போலீஸாரால் பதிவு செய்யப்பட்ட பாலியல் புகார் ஒன்றில் சிக்கிய நித்யானந்தா கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறி இன்னும் தலைமறைவாகவே உள்ளார். நித்யானந்தா தற்போது எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. கைலாசா என்ற ஒரு தீவை விலைக்கு வாங்கி அங்கு நித்யானந்தா ஆசிரமம் நடத்தி வருவதாக ஆன்லைனில் அவ்வப்போது உரையாற்றும் நித்யானந்தா கூறி வந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தது.

தனி நாடு ஒன்றை உருவாக்கி

தனி நாடு ஒன்றை உருவாக்கி

உயிருக்கு ஆபத்தான நிலையில் கூட சிகிச்சை பெற்று வருவதெல்லாம் கூட தகவல் வெளியானது. பின்னர் நித்யானந்தாவே வீடியோவில் தோன்றி இதுபோன்ற தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேசினார். நித்யானந்தா தனி நாடு ஒன்றை உருவாக்கி இருப்பதாக அவரது சீடர்கள் சொல்லிக்கொண்டாலும் இது எந்த அளவுக்கு உண்மை என்பது இப்போது வரை புரியாத புதிராகவே நீடிக்கிறது.

நியூஜெர்சி மாகாணத்தின்..

நியூஜெர்சி மாகாணத்தின்..

அவ்வப்போது தனது கைலாசா நாடு குறித்தும் அங்கு குடியுரிமை கோருவதற்கான தகுதிகள் எனவும் அடிக்கடி அப்டேட் கொடுத்து வந்த நித்யானந்தா சீடர்கள் தனி நாடு கோரி ஐநாவில் விண்ணப்பித்ததாகவும் பகீர் கிளப்பினர். கடந்த 2 தினங்களுக்கு முன்பாக கூட அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தின் நகரம் ஒன்றில் கைலாசாவுடனான இருதரப்பு ஒப்பந்தம் நிறைவேறியதாக நித்யானதா சீடர்கள் தரப்பில் சொல்லப்பட்டது. இது தொடர்பான புகைப்படங்கள் கூட வெளியாகின.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை

அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை

நியூஜெர்சியின் நெவார்க் நகர மேயர் ரஸ் ஜெ.பராக்கா மற்றும் கைலாசா பிரதிநிதி விஜய்ப்ரியா நித்தியானந்தா இடையே இருதரப்பு மக்களின் மேம்பாட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நித்யானதா சீடரக்ள் தெரிவித்து இருந்தனர். மேலும், கைலாசாவை இறையாண்மை கொண்ட நாடாக அமெரிக்கா அறிவித்துள்ளதாக கூட நித்யானந்தா ஆதரவாளர்கள் பூரிப்புடன் கூறி வந்தனர். ஆனால் இதுபற்றி அமெரிக்கா தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

அமெரிக்க அங்கீகாரம்

அமெரிக்க அங்கீகாரம்

ஆன்மீக பயிற்சி தொடர்பான ஒப்பந்தத்தையே கைலாசாவுக்கு அமெரிக்க அங்கீகாரம் அமெரிக்கா அளித்துவிட்டதாக நித்யானந்தா சீடர்கள் பரப்பி விட்டது என்று கூட சொல்லப்பட்டது. இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க நித்தியானந்தா மீதான வழக்கு ஒன்றில் மத்திய உள்துறை அமைச்சகம் பதிலளிக்குமாறு குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனது மகள்களான லோப முத்ரா (வயது 22), நந்திதா (வயது 18) ஆகிய இருவரை நித்யானந்தா சட்ட விரோதமாக கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் மீட்டு தர வேண்டும் என்று அவரது தந்தை குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றை கடந்த 2019 ஆம் ஆண்டு தாக்கல் செய்தார்.

பதிலளிக்க உத்தரவு

பதிலளிக்க உத்தரவு

இந்த மனு மீதான விசாரணை நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றம் பல முறை உத்தரவு பிறப்பித்தும் இரு இளம்பெண்களையும் மீட்க எந்த நடவடிக்கையும் எடுத்தததாக தெரியவில்லை எனவும் உள்துறை அமைச்கம் உள்பட எந்த ஒரு பிரதிவாதிகளும் பதில் மனுவை தாக்கல் செய்யவில்லை என்று கூறிய நீதிமன்றம்.. உள்துறை அமைச்சகம் உரிய பதிலளிக்குமாறு கூறி வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி மாதம் 6 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

English summary
Controversial preacher Nithyananda, who has faced various cases including sexual complaints and human trafficking, left India in 2019 and is still absconding. Nityananda is said to have created the country Kailasa. In this situation, the Gujarat High Court has ordered the Ministry of Home Affairs to respond in a case against Nithyananda.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X