ஹைதராபாத் பெண் கொலை.. என்கவுன்ட்டர் நடத்திய போலீஸாருக்கு ரொக்க பரிசு அறிவித்த குஜராத் தொழிலதிபர்
Recommended Video
காந்திநகர்: தெலுங்கானா மாநிலத்தில் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேரை என்கவுன்ட்டர் செய்த போலீஸாருக்கு குஜராத் தொழிலதிபர் ஒருவர் ரூ 1 லட்சம் ரொக்க பரிசு அறிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் கால்நநடை மருத்துவர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் 4 பேரை சைபராபாத் போலீஸார் கைது செய்தனர். பெண்ணின் வாகனத்தை வேண்டுமென்றே பஞ்சர் செய்து விட்டு அவருக்கு உதவுவது போல் நடித்து இந்த சதி வேலையை இவர்கள் நடத்தியுள்ளனர்.
அந்த பெண்ணுக்கு வலுக்கட்டாயமாக அவரது வாயில் ஊற்றிய கயவர்கள் அவர் நிலைத்தடுமாறிய பின்னர் கோரச் செயலை செய்து சந்தனப்பள்ளி அருகே உள்ள பாலத்தில் எரித்து கொன்றனர்.

விசாரணைக்கு உத்தரவு
இந்த விவகாரத்தில் முகமது ஆரிப் 26, ஜொள்ளு சிவா 20, ஜொள்ளு நவீன் 20, சிண்டகுண்டா சென்னைகேஷ்வலு 20 என நான்கு பேரும் கைது செய்யப்பட்டு பல்வேறு விசாரணைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த வழக்கு விரைவு நீதிமன்றத்தில் விசாரிக்க உத்தரவிடப்பட்டது.

என்கவுன்ட்டர்
அப்போது குற்றவாளிகள் 4 பேரையும் விரைவில் தூக்கிலிட வேண்டும் என பெரும்பாலான மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த நிலையில் மேற்கண்ட 4 பேரையும் போலீஸார் நேற்று அதிகாலை 3.30 மணிக்கு என்கவுன்ட்டர் செய்தனர்.

போலீஸ் மீது தாக்குதல்
இந்த சம்பவம் சைபராபாத் காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் தலைமையிலான போலீஸார் நடத்தினர். கொலையை எப்படி செய்தார்கள் என்ற விசாரணைக்கு அழைத்து சென்ற போது போலீஸார் மீது தாக்குதல் நடத்தியதால் அவர்களை என்கவுன்ட்டர் செய்தோம் என சஜ்ஜனார் விளக்கம் அளித்தார்.

குஜராத் முதல்வர்
இந்த சம்பவத்துக்கு தேசிய மனித உரிமை ஆணையம் எதிர்ப்பு தெரிவித்து வழக்கு பதிவு செய்துள்ள நிலையிலும் பெரும்பாலான மக்கள் இந்த சம்பவத்தை வரவேற்றனர். சிலர் போலீஸார் மீது பூக்களை தூவினர். இந்த என்கவுன்ட்டர் குறித்து குஜராத் முதல்வர் விஜய் ரூபானி பாராட்டியிருந்தார்.












Click it and Unblock the Notifications