வெளிநாடு வாழ் இந்தியர் மாநாடு.. அடுத்தாண்டு குஜராத்தில்?
காந்திநகர்: பிரவாசி பாரதீய திவாஸ் என்ற பெயரில் ஆண்டு தோறும் மத்திய அரசால் நடத்தப்படும் வெளிநாடு வாழ் இந்தியர் மாநாடு, அடுத்த ஆண்டு குஜராத்தில் நடைபெறலாம் என்று தெரிகிறது.
மோடி பிரதமராகியுள்ளதைத் தொடர்ந்து இந்த மாநாட்டை குஜராத்தில் நடத்த மத்திய அரசு விரும்புவதாக தெரிகிறது. மேலும், இந்த மாநாட்டுடன் சேர்த்து, மோடியின் செல்லப் பிள்ளையான வைபிரண்ட் குஜராத் என்ற 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை குஜராத் அரசு நடத்தும் மாநாட்டையும் நடத்தத் திட்டமிட்டு வருகிறதாம்.
2015ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி வெளிநாடு வாழ் இந்தியர் மாநாடு நடைபெறும். குஜராத்தில் இது நடைபெறவுள்ளதாக தெரிகிறது.
மகாத்மா காந்தி நினைவாக...
மகாத்மா காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா திரும்பிய நாளை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜனவரி 9ம் தேதி இந்த நாள், வெளிநாடு வாழ் இந்தியர் தினமாக கொண்டாடப்படுகிறது. அன்றே மாநாட்டையும் மத்திய அரசு நடத்துகிறது.
சகலரும் கூடும் மாநாடு...
இந்த மாநாட்டில் வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியப் பிரபலங்கள், பல்வேறு நாடுகளில் முக்கியப் பொறுப்புகளில் அதாவது அதிபர், பிரதமர், அமைச்சர்கள் பொறுப்பில் உள்ள இந்திய வம்சாவளியினர், தொழிலதிபர்கள், கலை, இலக்கியத் துறையினர் என சகலரும் கூடுவர்.
வைபிரண்ட் குஜராத்...
மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது ‘வைபிரண்ட் குஜராத்' என்ற பெயரில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை வெளிநாட்டு தொழில் முதலீட்டாளர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வந்தார். இதன் மூலம் பெருமளவிலான தொழில் முதலீடுகளையும் மோடி அரசு குஜராத்துக்கு இழுத்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2 மாநாடுகளையும் சேர்த்து...
எனவே அடுத்த ஆண்டு குஜராத்தில் வெளிநாடு வாழ் இந்தியர் மாநாடு நடைபெறும்போது கூடவே வைபிரண்ட் குஜராத் மாநாட்டையும் நடத்த குஜராத் அரசு விரும்புகிறது. இதுதொடர்பாக மத்திய அரசும், குஜராத் அரசும் ஆலோசனை நடத்தி வருகின்றனவாம்.
காந்திநகரில்...
தலைநகர் காந்திநகரில் உள்ள மகாத்மா மந்திரில் இந்த மாநாடு நடைபெறும் என்று குஜராத் மாநில மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிகரிக்கலாம்...
கடந்த 2013ல் நடந்த வைபிரண்ட் குஜராத் மாநாட்டில் 121 நாடுகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர் என்பது நினைவிருக்கலாம். தற்போது மோடி பிரதமராகியுள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் குஜராத் அரசு எதிர்பார்க்கிறது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications