உச்சத்தில் கோடை வெப்பம்.. உருகிய தார் சாலைகள்.. "டயரில் எல்லாம் ஒட்டி.." வாகன ஓட்டிகள் அவதி!
அகமதாபாத்: கோடைக் காலத்தில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், குஜராத்தில் சாலைகளே உருகிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஒவ்வொரு கோடைக் காலத்திலும் வெப்பம் முந்தைய ஆண்டை காட்டிலும் உச்சம் தொட்டு வருகிறது. பருவநிலை மாற்றம், புவி வெப்ப மயமாதல் என இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வெப்பம் உச்சத்தில் இருப்பதால் பொதுமக்களால் மதிய நேரத்தில் வெளியே கூட செல்ல முடியாத சூழலே இருந்து வருகிறது.
இதனிடையே கோடை வெயில் எவ்வளவு உக்கிரமாக இருக்கிறது என்பதைக் காட்டும் வகையிலான ஒரு வீடியோ இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. குஜராத் மாநிலத்தில் வெயில் உச்சத்தில் இருக்கும் நிலையில், அங்கே புதிதாகப் போடப்பட்ட தார் அப்படியே உருகியுள்ளது. அது வாகன ஓட்டிகளின் டயர்களிலும் ஓட்டிக் கொள்கிறது. இதனால் அங்கே வாகன ஓட்டிகளின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
தார் உருகி டயரில் ஒட்டிக் கொள்வதால் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் ஓட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் மட்டுமன்றி பாதசாரிகளின் செருப்புகளிலும் இந்த தார் ஒட்டிக் கொள்வதால் நடந்து செல்வோரும் மோசமான பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். பொதுவாகத் தார் போட்ட பிறகு அதன் காய அதன் மேல் மணலைப் போடுவார்கள்.
ஆனால், தார் போட்ட உடன் வெப்பம் உச்சத்தில் இருந்ததால், மணலை பிறகு போடலாம் என இருந்துள்ளனர். அப்போது சாலையில் செல்லும் வாகனங்களின் டயர்களில் தான் அது ஒட்டிக் கொண்டு இருக்கிறது. இந்த வீடியோ டிரெண்டான நிலையில், அதன் பின்னரே தார் மீது மணலை போட்டு அதை உளற வைக்கும் பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பருவமழை காலத்தில் சாலைகள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கோடைக் காலத்தில் சாலைகள் போட்டுள்ளனர். இருப்பினும், அதீத வெப்பம் காரணமாகத் தாரே மீண்டும் உருகிய சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது.
முன்னதாக அகமதாபாத்திலும் கடந்த மாதம் சுமார் 1.5 கிமீ சாலை இதேபோல அதீத வெப்பம் காரணமாக உருகியது குறிப்பிடத்தக்கது. கோடை வெப்பம் எந்தளவுக்கு உச்சம் தொட்டு வருகிறது என்பதைக் காட்டும் வகையிலேயே இந்த வீடியோ இருக்கிறது.
தமிழ்நாட்டிலும் கூட கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கே கடந்த வாரம் அதிகபட்சமாக வெப்பம் 107 டிகிரி பாரன்ஹீட் வரை கூட சென்றது. ஒவ்வொரு நாளும் தினசரி வெப்பம் பல இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டுள்ளது. நேற்று கூட ஈரோட்டில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
வெப்பம் ஒரு பக்கம் உச்சம் தொட்டு வந்தாலும் கடந்த சில நாட்களாகவே மாநிலத்தில் பரவலாக மழையும் பெய்து வருகிறது. கோடை வெப்பத்திற்கு இது இதமாகவே உள்ளது. அடுத்து 5 நாட்களுக்குத் தமிழ்நாட்டிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவே சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications