For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தலைமேல கண்ணாடி விழுந்தா அது சென்னை ஏர்போர்ட்.. சொய்ங்கன்னு மழை பெய்தா அது...!

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

குவாஹாட்டி: குவாஹாட்டி விமான நிலையத்தில் பெய்த கனமழையால் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் இடத்தில் நீருற்று போல் மழை நீர் ஊற்றிய சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

குவாஹாட்டியில் உள்ளது கோபிநாத் பர்டோலாய் சர்வதேச விமான நிலையம். இங்கு அண்மையில் விரிவாக்க பணிகள் நடைபெற்றன. இந்நிலையில் திங்கள்கிழமை இரவு இப்பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை கொட்டியது.

Guwahati airport turns shower after rain

இதனால் விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் இடத்தில் உள்ள ஏசி வென்ட்டிலேஷன், லைட்டு சாக்கெட்டுகள் மற்றும் பால்ஸ் சீலிங்கில் உள்ள கேப்புகளில் இருந்து தண்ணீர் அருவி போல் கொட்டியது.

இந்த மழை நீர் உள்ளே புகுந்ததால் பயணிகளின் உடைமைகளை சோதனை செய்யும் கருவிகள் சேதமடைந்தன. இதை வீடியோவாக எடுத்த பயணிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கும் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா ஆகியோரின் டுவிட்டர் முகவரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

நம் நாட்டில் பஸ் நிலையம், ரயில் நிலையம், ஏன் பஸ், ரயில்கள் கூட ஓட்டை உடைச்சலுடன் மழை நீர் உள்ளே நுழைவதை பார்த்துள்ளோம். ஆனால் விமான நிலையத்தில் இப்படி அருவி போல் நீர் ஊற்றுவதை தற்போது தான் பார்க்கிறோம்.

English summary
A video of water gushing through the roof at the airport in Guwahati has gone viral on social media. Heavy rain for little over an hour on Monday evening caused water to enter through the ceiling of the newly-made extension of the passenger lounge.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X