For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹஜ்ஜுக்கு செல்கையில் வயாக்ரா, ஆபாசப்படங்கள் வேண்டாமே: யாத்ரீகர்களுக்கு அறிவுரை

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: ஹஜ் புனித பயணம் செய்பவர்கள் பால் உணர்வைத் தூண்டும் வயாக்ரா, க்ரீம்கள், ஆபாசப்படங்களை எடுத்துச் செல்லக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்கள் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ளும் நேரம் இது. கடந்த 16ம் தேதியில் இருந்து இந்தியாவில் இருந்து மக்காவுக்கு ஹஜ் பயணிகளை ஏற்றிக் கொண்டு விமானங்கள் செல்கின்றன. இந்நிலையில் இந்திய ஹஜ் கமிட்டி ஹஜ் யாத்ரீகர்களுக்காக சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,

வயாக்ரா

வயாக்ரா

ஹஜ் புனித பயணம் செய்வோர் வயாக்ரா, பாலுணர்வைத் தூண்டும் எண்ணெய், க்ரீம்கள், ஆபாச படங்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்ல வேண்டாம் என்று வலியுறுத்துகிறோம்.

சவுதி

சவுதி

சவுதி அரேபியாவுக்குள் எடுத்துச் செல்ல தடை செய்யப்பட்ட பொருட்களை யாரும் கொண்டு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம்.

பிரச்சனை

பிரச்சனை

இவ்வளவு தெரிவித்தும் 2013 மற்றும் 2014ம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொண்டவர்களில் சிலர் வயாக்ரா, பாலுணர்வைத் தூண்டும் எண்ணெய், க்ரீம்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச் சென்று சிக்கியுள்ளனர். இது முக்கியமான பிரச்சனை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹஜ்

ஹஜ்

ஹஜ் என்பது அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று செய்யும் புனித கடமை ஆகும். அப்போது இஸ்லாமியர்கள் செக்ஸில் ஈடுபடாமல் இருப்பார்கள். இந்நிலையில் ஹஜ் கமிட்டி இப்படி ஒரு அறிக்கையை வெளியிட்டிருப்பது இஸ்லாமியர்கள் செக்ஸ் அடிமைகள் என்றும், அவர்கள் ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும்போது கூட செக்ஸ் இல்லாமல் இருக்க முடியாது என்றும் கூறுவதை போல் உள்ளது என அனைத்து இந்திய மில்லி கவுன்சிலைச் சேர்ந்த எம்.ஏ. காலித் தெரிவித்துள்ளார்.

English summary
The Haj committee of India has issued an advisory asking the pilgrims not to carry Viagra, sexual oil and creams, porn materials while going to Saudi Arabia to perform haj.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X