ஐசியூவில் "அந்த" நொடி!.. படுக்கைக்கு பக்கத்திலேயே சிலிர்ப்பு தருணம்.. இக்பால் முகத்தில் ஒரே பூரிப்பு
கான்பூர்: இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி பலரையும் நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கி வருகிறது.. என்ன காரணம்? எங்கே என்ன நடந்தது?
ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்களின் பிள்ளைகளுக்கு சிறப்பாக திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதே வாழ்வின் லட்சியமாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கும்... வாழ்வில் ஒருமுறை நடக்கப்போகும் நிகழ்வு என்பதால், எப்பேர்பட்டாவது, பிள்ளைகளின் கல்யாணத்தை நடத்தி வைத்துவிட ஆசைப்படுவார்கள். அப்படிப்பட்ட நெகிழ்ச்சி தருணம் உத்தரபிரதேசத்தில் நடந்திருக்கிறது..

உத்தரபிரதேசம்: உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் வசித்து வருகிறார் முகமது இக்பால்.. 51 வயதாகிறது.. இவர்களது 2 மகள்களுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இதனால், திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார் முகமது இக்பால்.. இந்நிலையில், திடீரென சில நாள்களுக்கு முன்பு இக்பாலுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுவிட்டது.
எனவே, அவரது குடும்பத்தார் இக்பாலை லக்னோவில் உள்ள ஈரா மருத்துவமனையில் கொண்டுபோய் அனுமதித்தனர்.. உடனடியாக ஐசியூவில் சிகிச்சை இக்பாலுக்கு சிகிச்சை ஆரம்பமானது.. இக்பால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று டாக்டர்கள் கூறினார்கள்.. உடல்நிலையில் முன்னேற்றம் ஆகும் வரை தொடர்ந்தும் இக்பால் இங்கேயே இருக்க வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தினார்கள்.
மகள்கள்: எனினும், மகள்களின் கல்யாணத்தை முன்கூட்டியே நடத்தி முடித்துவிடலாம் என்று வீட்டுக்கு செல்ல ஆசைப்பட்டார் இக்பால்.. விரும்பினார். ஆனால், டாக்டர்கள் விடவில்லை.. ஐசியூவில் சிகிச்சை நடந்துவரும்நிலையில், வீட்டுக்கு போவது ஆபத்து என்று கண்டிப்புடன் சொல்லிவிட்டார்கள்.
இதனால் மனமுடைந்து போன இக்பால், மகள்களின் கல்யாணத்தை நினைத்து கவலையில் இருந்தார்.. ஐசியூவில் இருந்துகொண்டு இக்பால் கவலைப்படுவதை பார்த்து குடும்பத்தினரும் மனவேதனையடைந்தனர். இப்படி 2 தரப்பிலுமே கவலையுடன் இருப்பதை பார்த்த மருத்துவமனை நிர்வாகம், அதிரடியாக ஒரு முடிவை எடுத்தது.
அனுமதி: அதன்படி, ஐசியூவிலேயே மகள்களின் கல்யாணத்தை நடத்த அனுமதி தந்தது.. தக்க பாதுகாப்போடும், மற்ற நோயாளிகளுக்கு தொந்தரவு வந்துவிடாமலும் மருத்துவமனையிலேயே மகள்களுக்கு திருமணத்தை நடத்த அனுமதி கொடுத்தது..
மருத்துவமனையின் ஒப்புதலோடு எரா ஆஸ்பத்திரி டாக்டர்கள், நர்ஸ்கள் ஆதரவுடன் இந்த திருமணம் நடந்தது.. இஸ்லாமிய முறைப்படி ஐசியுவிலேயே இக்பால் படுக்கைக்கு பக்கத்திலேயே எளிமையான முறையில் கல்யாணம் முடிந்தது.. மணமக்கள், மருத்துவர்கள், மத குரு ஒருவர் மட்டுமே இந்த திருமண நிகழ்வில் பங்கேற்றனர். ஆனால், மணமக்கள் மருத்துவ கவச உடை அணிந்திருந்தனர்...
ஆசீர்வாதம்: இதுகுறித்து இக்பாலின் சொல்லும்போது, எங்கள் அப்பாதான் எங்கள் உலகம்.. அவரது ஆசீர்வாதம் இல்லாமல் கல்யாணம் செய்து கொள்ள எங்களுக்கு விருப்பமில்லை.. மனிதாபிமான அடிப்படையில் எங்களுக்கு மருத்துவமனை நிர்வாகம் அனுமதி தந்து உதவியது.. எங்கள் அப்பா சுயநினைவுடன் இருக்கும்போதே அவரது முன்னிலையில் நாங்கள் கல்யாணம் செய்து கொண்டோம். அவரது கடைசி விருப்பத்தையும் நிறைவேற்றி விட்டோம் என்று நெகிழ்ந்து சொல்கிறார்கள்.
இந்த திருமணம்தான் இணையத்தில் 4 நாட்களாகவே பேசப்பட்டு வருகிறது.. இக்பால் பூரணமாக குணமடைய வேண்டும் என்றும், மணமக்கள் சிறப்பாக வாழ வேண்டும் என்றும் இணையவாசிகள் வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.
வாழ்த்துக்கள்: மகள்கள் தங்கள் அப்பாவின் ஆசீர்வாதத்துடன் இப்போது வாழ்க்கையை தொடங்கியிருக்கிறார்கள்.. இக்பால் குடும்பத்தினரின் அன்பு பாசம் மட்டுமல்ல, குடும்ப உறவுகள் மீது மருத்துவமனை நிர்வாகம் வைத்திருக்கும் மதிப்பும், மரியாதையும் இந்த திருமணத்தின் மூலம் வெளிப்படுவதை பார்க்க முடிகிறது.. அன்புக்கும் உண்டோ அடைக்குந் தாழ்!!!
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications