தெலுங்கானா உதயமாகி ஓராண்டு நிறைவு- உற்சாக கொண்டாட்டம்!
ஹைதராபாத்: ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து பிரிந்து தெலுங்கானா தனி மாநிலமாக அந்தஸ்து பெற்று ஓராண்டு நிறைவு பெறுகிறது. இதையொட்டி நாளை முதல் ஒரு வாரம் "மாநில நிறுவன நாள்" கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
ஆந்திரப் பிரதேசம் மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பகுதியை பிரித்து தனி மாநிலமாக கடந்த ஆண்டு ஜூன் 2-ந் தேதி உருவாக்கப்பட்டது.

இருப்பினும் இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகரம், பொதுவான, உயர் நீதிமன்றம், பொதுவான ஆளுநர், பொதுவான பொதுத்தேர்வு முறை ஆகியவற்றை கடந்த ஓராண்டாக அம்மாநில மக்கள் வலியுறுத்திவந்தனர். இரு மாநிலங்களுக்கும் இடையே பல்வேறு சர்ச்சைகள் இருந்தபோதும் இரு மாநிலங்களும் சேர்ந்து சில கொள்கை முடிவுகளை எடுத்து செயல்படுத்த கவனம் செலுத்தி வருகிறது.
இதனிடையே இன்று தெலுங்கானா மாநில நிறுவன நாள் முதலாம் ஆண்டை முன்னிட்டு ஹைதராபாத்தில் உள்ள பூங்காவில் மாநில போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மலர் தூவி முதல் மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும் இந்த மாநில நிறுவன நாள் துவக்க விழாவுக்கு செகந்தராபாத் மைதானத்தில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மைதானத்தில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உயர் போலீஸ் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications