For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாலியல் தொல்லை.. ஒரே நேரத்தில் 444 மாணவிகள் வழக்கு... "ஷாக்" ஆன கோழிக்கோடு பல்கலை!

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோடு பல்கலைக்கழகத்தை சேர்ந்த 444 மாணவிகள் கையெழுத்து போட்டு கேரள ஹைகோர்ட்டில் ஒரு மனுவை தாக்கல் செய்து உள்ளனர்.

அந்த மனுவில் பல்கலைக்கழக மாணவர்களாலும், வெளியாட்களாலும் தங்களுக்கு தொல்லை ஏற்படுவதாகவும் பல முறை அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் தங்களது கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ளனர்.

Harassed girl students of Calicut varsity move Kerala High Court

அவர்கள் அந்த மனுவில் துன்புறுத்தல் செய்வது, ஆபாசமான முத்திரைகள் காட்டுவது, உடல் ரீதியான மிரட்டல், பொது இடங்களில் கேலி செய்வது என இது போல் பல்வேறு புகார்கள் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக பல்கலைக்கழக அதிகாரிகளும் மற்றும் போலீசாரும் எடுத்த நடவடிக்கைகள் தோல்வி அடைந்து விட்டன.

இந்த பல்கலைக்கழக வளாகத்தில் 80 சதவீதம் பெண்கள் சிறிய அளவிலான பாதுகாப்பு மட்டுமே அவர்களுக்கு பல்கலைக்கழக அதிகாரிகளால் வழங்கப்படுகிறது. இந்த மனுவில் முதலில் அனுபாமா எம்.பில் மாணவி கையெழுத்திட்டு உள்ளார். இந்த மனுவின் நகலை தலைமை நீதிபதி அசோக் பூஷன், ஆளுநர் நீதிபதி சதாசிவத்திற்கு அனுப்பி வைத்து உள்ளார்.

இது தொடர்பாக பதிவாளர் டாக்டர் டி.ஏ அப்துல் மஜீத் கூறும் போது பல்கலைக்கழகம் அது பெற்ற அனைத்து புகார்கள் மீதும் நடவடிக்கை எடுத்து உள்ளது. இத்தகைய புகார் திடீரென்று எப்படி வந்தது என்று எனக்கு தெரியவில்லை. சில ராகிங் வழக்குகள் சமீபத்தில் வந்து இருந்தன. அதனை நாங்கள் பெண்கள் குழுவுக்கு அனுப்பிவைத்தோம். சில வழக்குகள் போலீசிலிலும் கொடுக்கப்பட்டு உள்ளது.

இந்தியாவில் உள்ள 105 உயர் கல்வி நிறுவனங்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு எடுத்த அறிக்கையின் 2014-15 கால கட்டங்களில் பல்வேறு பல்கலைகழகங்களில் 295 பாலியல் துன்புறுத்தல் வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
A day after the country observed the third anniversary of Nirbhaya tragedy, 400-odd girl students of Calicut University in north Kerala approached the Kerala high court with a plea to ensure their safety on the campus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X