ஆண் குழந்தை தான் வேண்டும்.. விடாமல் முயன்ற தம்பதி.. 10 பெண் குழந்தைக்கு பின் பிறந்த மகன்! ஹேப்பியாம்
சண்டிகர்: ஹரியானாவில் ஆண் வாரிசு மீதான மோகத்தில் தம்பதி அடுத்தடுத்து குழந்தை பெற்று கொண்டனர். கடந்த 19 ஆண்டுகளில் மொத்தம் 10 பெண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். ஆனாலும் தம்பதி விடாத நிலையில் 11வதாக ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.
ஆண், பெண்.. எந்த குழந்தையாக இருந்தாலும் குழந்தை.. குழந்தை தான். குழந்தையின் பாலினத்திலும் எந்த பாகுபாடும் கிடையாது. ஆண்களை போல் பெண்களும் தற்போது அனைத்து துறைகளிலும் கால்பதித்து வருகின்றனர். அம்மா, அப்பாக்களையும் மகன்களை போல் மகள்கள் இப்போது பராமரித்து வருகின்றனர்.

இதனால் எந்த குழந்தையாக இருந்தாலும் கூட மனதார தம்பதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் தற்போதும் கூட சில தம்பதிகளுக்கு என்ன தான் பெண் குழந்தைகள் இருந்தாலும் ஆண் குழந்தைகள் வேண்டும் என்ற விருப்பம் உள்ளது. இதற்கு முயற்சி செய்யும் தம்பதிகளில் சிலருக்கு மகன் பிறப்பது உண்டு. சிலருக்கு மகள்கள் தான் தொடர்ந்து பிறப்பதை நம் அண்டை வீடுகளில் கூட பார்த்து இருக்கலாம்.
இப்படித்தான் ஆண் குழந்தை மீதான மோகத்தால் ஹரியானாவில் ஒருவர் 10 பெண் குழந்தைகளை பெற்றெடுத்த சம்பவம் நடந்துள்ளது. இப்போது 11 வதாக அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் குடும்பமே ஹேப்பியாகி உள்ளது. இந்த சம்பவம் ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத் மாவட்டதில் நடந்துள்ளது. அந்த மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சய். இவரது மனைவி பெயர் சுனிதா. இவர்கள் 2 பேருக்கும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் முடிந்தது. சஞ்சய் கூலி வேலைக்கு சென்றார். அதன்பிறகு சிறிது காலம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்தது. தற்போது 100 நாள் வேலை திட்டத்துக்கு சென்று வருகிறார்.
இந்த தம்பதிக்கு முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அவர்களுக்கு ஆண் குழந்தை மீது மோகம் இருந்து வந்தது. இதனால் இருவரும் ஆண் குழந்தையை பெற்றெடுக்க விரும்பினர்.இதனால் மீண்டும் சுனிதா கர்ப்பமானார். 2வதும் பெண் குழந்தை பிறந்தது. ஆனாலும் இருவரும் முயற்சியை கைவிடவில்லை. தொடர்ந்து குழந்தை பெற்றெடுத்தனர். ஆனால் அவர்களின் ஆசை மட்டும் நிறைவேறவில்லை. 3,4, 5, 6, 7, 8, 9, 10 என்று அடுத்தடுத்து பெண் குழந்தைகள் பிறந்தன. மொத்தம் 10 குழந்தைகள் பிறந்தன.
அப்போதும் கூட அவர்களுக்கு ஆண் குழந்தை மீதான மோகம் குறையவில்லை. இதனால் மீண்டும் சுனிதா கர்ப்பமானார். தற்போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 10 பெண் குழந்தைகளுக்கு பிறகு சஞ்சய் - சுனிதா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதால் இருவர் மட்டுமின்றி அவர்களின் குடும்பத்தினர் செம ஹேப்பியாகி உள்ளனர்.
இந்த சம்பவம் தற்போது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் சொல்லப்போனால் பிரசவத்துக்கு உதவிய டாக்டர் சந்தோசும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார். இதுபற்றி அவர், ‛‛என் சர்வீஸில் ஒரு பெண் 10 குழந்தைகளை பெற்றெடுத்து அவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கும்போது 11வது குழந்தையை பெற்றெடுத்து பார்த்தது இல்லை. 11 குழந்தைகள் பிறந்துள்ளதால் அவரது கர்ப்பப்பை பாதிக்கப்படும்'' என்று கூறியுள்ளார்.
மேலும் இந்த செய்தி தற்போது இணையதளங்களில் பரவி வருகிறது. இதனை பார்க்கும் பலரும் சஞ்சய் மற்றும் சுனிதாவை திட்டி வருகின்றனர். பெண் என்பவள் குழந்தை பெற்றெடுக்கும் கருவியா? இத்தனை குழந்தைகள் பெற்றெடுத்துள்ள நிலையில் அவர்களை எப்படி வளர்த்து படிக்க வைப்பீர்கள்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications