Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

உபரி நீர் பாகிஸ்தானுக்கு போயிடும்.. அது நாட்டிற்கே ஆபத்து! பஞ்சாப்பிற்கு செக் வைக்கும் ஹரியானா சிஎம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையே சட்லஜ் மற்றும் பியாஸ் நதி நீரைப் பகிர்வதில் மோதல் தொடர்ந்து வருகிறது. ஒரு சொட்டு நீரைக் கூட ஹரியானாவுக்குத் தரப் போவதில்லை என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் கூறியிருந்த நிலையில், ஹரியானா அதற்குப் பதிலடி கொடுத்துள்ளது. அதாவது பக்ரா அணையின் கூடுதல் நீரை ஹரியானாவுக்கு விடுவிக்கவில்லை என்றால் அது பாகிஸ்தானுக்கே செல்லும் என்றும் இது ஒட்டுமொத்தத் தேசத்திற்கு நல்லதில்லை என்றும் கூறியுள்ளது.

நமது நாட்டில் பல்வேறு மாநிலங்களுக்கும் இடையே நதி நீர் பகிர்வில் மோதல் இருந்தே வருகிறது. அதன்படி பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையே சட்லஜ் மற்றும் பியாஸ் நதி நீரைப் பகிர்வதில் மோதல் இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டது. அணையில் இருந்து ஒவ்வொரு மாதமும் எவ்வளவு நீர் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை இந்த வாரியமே முடிவு செய்துள்ளது.

Haryana s Bhakra Dam Request to Punjab Excess Water May Flow to Pakistan

பஞ்சாப் முதல்வர்

ஏற்கனவே ஹரியானாவுக்கு ஒதுக்கப்பட்ட நீரை வழங்கிவிட்டதாகவும் இனி ஒரு சொட்டு நீரைக் கூட ஹரியானாவுக்குத் தரப் போவதில்லை என பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் கூறியிருந்தார். இதற்கிடையே ஹரியானா மீண்டும் இந்த விவகாரத்தில் கோரிக்கை விடுத்துள்ளது. பக்ரா ஆற்றின் கூடுதலை நீரை பஞ்சாப்பிற்கு வழங்கவில்லை என்றால் அந்த உபரி நீர் பாகிஸ்தானுக்குச் செல்லும் என்றும் தெரிவித்துள்ளது..

ஹரியானா முதல்வர்

இது தொடர்பாக ஹரியானா மாநில முதல்வர் நயாப் சிங் சைனி கூறுகையில், "சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது. இதனால் பருவமழை சீசனுக்கு முன்பு பக்ரா அணையின் நீரைக் காலி செய்ய வேண்டும். இந்த பக்ரா அணை சிந்து ஒப்பந்தத்தின் கீழ் உள்ள மிகப் பெரிய அணைகளில் ஒன்றாகும். இதனால் ஜூன் மாதத்திற்கு முன்பு பக்ரா அணை நீர்த்தேக்கத்தைக் காலி செய்ய வேண்டியது அவசியம்..

அப்போது தான் பருவமழை சீசனில் தண்ணீரைச் சேகரிக்க முடியும். நீர்த்தேக்கத்தில் போதிய இடமில்லை என்றால், உபரி நீர் ஹரி-கே-பட்டன் வழியாக பாகிஸ்தானுக்குச் செல்லும்.. இது பஞ்சாப் மட்டுமின்றி நாட்டிற்கே நல்லது இல்லை.

குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்

பஞ்சாப் அரசு பக்ரா அணையில் இருந்து நீரை விடுவிக்கவில்லை என்றால் டெல்லியிலும் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும்.. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சியில் இருந்த வரை, பஞ்சாப்பில் உள்ள பகவந்த் மான் அரசு டெல்லிக்குத் தண்ணீர் செல்வதில் எந்தவொரு ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லை. இப்போது டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை இழந்த நிலையில், ​​டெல்லி மக்களைத் தண்டிக்க பகவந்த் மான் இதுபோல செய்கிறார்" என்றார்.

நீரை விடுவிக்க வேண்டும்

ஒப்பந்தத்தின் கீழ் மார்ச் மாதத்திற்கான தனது பங்கை ஹரியானா ஏற்கனவே பெற்றுவிட்டதாக பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்த நயாப் சிங், "எங்கள் முழுப் பங்கையும் நாங்கள் இன்னும் பெறவில்லை. கடந்த மாதம் பக்ரா பியாஸ் மேலாண்மை வாரியத்தால் ஹரியானாவிற்கு வெளியிடப்பட்ட நீரில், டெல்லியின் குடிநீருக்கு 500 கனஅடி, ராஜஸ்தானுக்கு 800 கனஅடி போய்விட்டது. எனவே, ஹரியானாவுக்கு 6,800 கனஅடி மட்டுமே கிடைத்தது.

எங்கள் கோரிக்கையை ஏற்று ஹரியானாவுக்கு கிடைக்க வேண்டிய நீரை உடனடியாகத் தர வேண்டும். அப்படி வழங்கினாலும் கூட அது பக்ரா அணையில் சேமிக்கப்படும் தண்ணீரில் 0.0001 சதவீதமாக மட்டுமே இருக்கும். இது மிகவும் குறைவானது. இதனால் யாருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படப்போவதில்லை" என்று தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+