Surgical Strike 2: ஆஸ்பத்திரியில் இம்ரான்.. தீபாராதனை காட்டும் மோடி... தாக்குதலை கொண்டாடும் மக்கள்!
இணையத்தில் சர்ஜிக்கல்ஸ்டிரைக்2 என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
Recommended Video

ஜம்மு: ஆஸ்பத்திரியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அட்மிட் ஆகிவிட்டது போன்ற படங்களுடன் இணையத்தில் மீம்கள் றெக்கை கட்டி பறக்க ஆரம்பித்துள்ளன. பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குல் நடத்தி சரமாரியாக அழித்ததையடுத்து #Surgicalstrike2 என்ற ஹேஷ்டேக் உருவாகி உள்ளது.
40 ராணுவ வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டதற்கு சரியான பதிலடி தரப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். ஆனாலும், #indiaWantsRevenge என்ற ஹேஷ்டேக் ட்ராண்டாகி, எப்போதுதான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாட்டு மக்கள் கேள்விகளால் அதில் துளைத்தெடுத்து வந்தனர்.
அதன்படி யாருமே எதிர்பார்க்காத வகையில் இன்று விடிகாலை 3.30 மணிக்கு பதிலடியை பலமாக தர இறங்கியது இந்தியா. 40 2000 வகை மிராஜ் விமானங்களை வைத்து தாக்குதல் நடத்தி கூண்டோடு அழித்துவிட்டது.

ராகுல் காந்தி
அதிகாலையில் நாட்டையே அதிர வைத்து, 40 உயிர்கள் கொல்லப்பட்டதற்கு 300 பயங்கரவாதிகளை காவு வாங்கிவிட்டதை அறிந்து இதை நாட்டு மக்கள் கொண்டாடி வருகின்றனர். பயங்கரவாத முகாம்களை அழித்த இந்திய விமானப்படை விமானிகளுக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலை வணங்குவதாக டிவிட் போட்டுள்ளார்.

தேசிய கொடி
இதையடுத்து சர்ஜிக்கல் 2 என்ற ஹேஷ்டேக் உருவாகி உள்ளது. விமான படை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், பாராட்டும் விதமாகவும், தேசிய கொடியின் மூவர்ணம் கலந்த புகையை வெளிவிட்டவாறு விமானங்கள் வானில் பறப்பதை போல மீம்களை பறக்கவிட்டுள்ளனர் நெட்டிசன்கள்.

விமானம்-பைக்
அதேபோல, பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் பைக்கில் அந்நாட்டு கொடிகளுடன் சென்று கொண்டிருக்கிறார். ஆனால் அந்த பைக்கையே விமானம் போல் சித்தரித்துவிட்டனர் நம் ஆட்கள். நீ பைக்கிலே போனாலும் விமான படை தாக்குதலில் நீ காலி என்பதுபோல அந்த புகைப்படம் உள்ளது.

ஆஸ்பத்திரி
இதைவிட காமெடி அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் ஆஸ்பத்திரியில் படுத்து உள்ளதுபோல் உள்ளது. விமான படை தாக்குதல் நடந்ததால், இப்படி ஆஸ்பத்திரியில் வந்து அட்மிட்டே ஆயிட்டாராம். ஆஸ்பத்திரி வார்டு புளூ கலர் டிரெஸ், நெற்றியில் காயத்துக்கு கட்டு போட்டு இம்ரான்கானை படுக்கையில் படுக்க வைத்துவிட்டனர் நம் ஆட்கள்.

வீரர்களுக்கு அப்ளாஸ்
போட்ட பிளான் எல்லாம் பக்காவாக நடந்து முடிந்த திருப்தியில் மோடி கையில் தீபாராதனை காட்டி நிற்பது போல போட்டோ ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது. இதுபோல இன்னும் பல வகை, வகையான போட்டோக்களை பதிவிட்டு இந்தியமக்கள் வீரர்களுக்கு அப்ளாஸ் அடித்து வருகிறார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications