அதென்னங்க சீன பிளாஸ்டிக் அரிசி... அதெப்படி இருக்கும்?
டெல்லி: அரிசிகளில் கலக்கப்படும் சீன பிளாஸ்டிக் அரிசியானது சீனிக்கிழங்கு தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சின்த்தெடிக் பிளாஸ்டிக் பிசின் சேர்த்து உருவாக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபகாலமாக உணவுப் பொருட்களில் கலப்படம் என்ற பிரச்சினை பூதாகரமாக உருவாகியுள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக ரசாயனம் சேர்க்கப்பட்டிருப்பதாகக் கூறி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் மேகி நூடுல்ஸிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக குழந்தைகளுக்கு தரப்படும் சத்துப் பானங்கள் உட்பட வேறு சில உணவுப் பொருட்களிலும் பூச்சிகள், வண்டுகள், புழுக்கள் மற்றும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் கலந்திருப்பதாக செய்திகள் வெளிவந்த வண்ணமே உள்ளன.
அரிசியிலும் கலப்படம்...
இந்நிலையில், இந்தியாவின் மிக முக்கிய உணவு தானியங்களில் ஒன்றாகவும், தமிழ்நாட்டின் பிரதான உணவு தானியமாகவும் அமைந்துள்ள அரிசியில், சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்ற பிளாஸ்டிக் அரிசி கலப்படம் செய்யப் படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கு...
இது தொடர்பாக டெல்லி ஹைகோர்ட்டில் சுக்ரீவ துபே என்ற வக்கீல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர், ‘உலகமயமாக்கல் காரணமாக சீனாவில் இருந்து அரிசி அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவதாகவும், ஆனால், தரபரிசோதனை செய்யப்படாத அந்த அரிசியைச் சாப்பிடுபவர்களுக்கு இரைப்பை நோய்கள் ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
விசாரணை...
இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 20-ந் தேதி இந்த வழக்கை தலைமை நீதிபதி ரோகிணி, நீதிபதி ஜெயந்த் நாத் தலைமையிலான அமர்வு விசாரிக்க உள்ளது.
மக்கள் குழப்பம்...
இந்த வழக்கு இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதைத் தான் நல்ல பொருள் என நம்பி சாப்பிடுவது என்ற குழப்பத்திற்கு மக்கள் ஆளாகியுள்ளனர்.
நிஜ அரிசி போலவே...
இந்த பிளாஸ்டிக் அரிசிகள் பார்ப்பதற்கு நிஜ அரிசி போலவே காணப்படும். இவை சீனிக் கிழங்கு, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் சின்த்தெடிக் பிளாஸ்டிக் பிசின் சேர்த்து உருவாக்கப் படுகின்றன. அவற்றை வெறும் கண்களால் தரம் பிரிக்க இயலாது.
வீடியோ...
பிறகு சாதாரண அரிசியில் இருந்து பிளாஸ்டிக் அரிசிகளை எவ்வாறு தரம் பிரிப்பது என குழப்பமாக இருக்கிறதா? இதோ அதற்காக பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த செய்தி நிறுவனம் வீடியோ ஒன்றைத் தயாரித்து வெளியிட்டுள்ளது.
சமைத்தால் மட்டுமே...
அதன்படி, சமைத்தால் மட்டுமே பிளாஸ்டிக் அரிசியை தரம் பிரிக்க இயலும். சாதாரண அரிசியைப் போல் வேக வைத்ததும் இந்த பிளாஸ்டிக் அரிசி கைகளில் ஒட்டாது. காயவைத்த பிளாஸ்டிக் அரிசியை நெருப்பில் காட்டில் சீனிக்கிழங்கு வாசனை வரும்.
பிளாஸ்டிக் படலம்...
இந்த பிளாஸ்டிக் அரிசியைப் பயன்படுத்தி செய்யப்படும் சூப்களில் மேலே பிளாஸ்டிக் போன்ற மெல்லிய படலம் படியுமாம். மேலும், அது தீப்பிடிக்கக் கூடியது என்கிறார்கள்.
இரைப்பை நோய்...
இவ்வளவு அபாயகரமான பிளாஸ்டிக் அரிசியைச் சாப்பிட்டால், இரைப்பை நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகமாம். மூன்று கப் பிளாஸ்டிக் அரிசியை சாப்பிட்டால், ஒரு முழு பிளாஸ்டிக் பையையே சாப்பிட்டதற்கு சமம் என்கிறார்கள் நிபுணர்கள்.
மிரட்டும் கலப்படங்கள்...
தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இந்த கலப்பட அரிசியை தெரிந்தோ, தெரியாமலோ வியாபாரிகள் விற்று வருகிறார்களாம். பாக்கெட் பொருட்களில் கலப்படம் என்பதால், இயற்கைப் பொருட்களைச் சாப்பிடலாம் என்றால் இதிலும் வேறு வகையான கலப்படங்கள் மிரட்டுகின்றன.
தன் கையே தனக்குதவி...
பேசாமல் நமது மூதாதையர்கள் மாதிரி நாமும் எங்காவது கொஞ்சம் நிலத்தை வாங்கிக் கொண்டு, நாமே உழுது, நாமே பயிர் செய்து பூச்சிக்கொல்லி மருந்து இல்லாத, கலப்படம் இல்லாத உணவுகளை உருவாக்கி சாப்பிட வேண்டியது தான்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications