கத்தரி முடிந்தும் கொளுத்தும் கோடை... பலி 2207 ஆனது... ஆந்திராவில் மட்டும் 1600 பேர்!
டெல்லி: நாடு முழுவதும் கோடை வெயிலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 2200ஐத் தாண்டியுள்ளது. இதில், ஆந்திராவில் மட்டும் வெயிலின் தாக்கத்தால் 1600 பேர் உயிரிழந்துள்ளனர்.
கத்தரிவெயில் முடிவடைந்த பிறகும் நாட்டின் பல மாநிலங்களில் வெயிலின் உக்கிரம் இன்னும் குறையவில்லை. வெயிலின் தாக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நேற்று வரையில் இதன் எண்ணிக்கை 2ஆயிரத்து 005 ஆக இருந்தது. தற்போது இதன் எண்ணிக்கை 2200 ஆக உயர்ந்துள்ளது.

அதிகபட்சமாக ஆந்திரமாநிலத்தில் ஆயிரத்து 600 பேர் வரை பலியாகி உள்ளனர் . அம்மாநிலத்தில் பிரகாசம் மாவட்டத்தில் மட்டும் சுமார் 333 பேர் வெயிலால் உயிரிழந்துள்ளனர்.
இதேபோல், தெலுங்கானாவில் 541 பேரும், ஒடிசா மாநிலத்தில் பலியானோர் எண்ணி்க்கை 17-ல் இருந்து 21 ஆகவும் அதிகரித்துள்ளது.

வெயிலின் தாக்கம் இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications