தெலுங்கானாவில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு 309 பேர் பலி
ஹைதராபாத்: தெலுங்கான மாநிலத்தில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால், 309 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. அதிகபட்சமாக நல்கொண்டா மாவட்டத்தில் 90 பேர் இறந்துள்ளனர்.
தெலுங்கான மாநிலத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கின்றன. பகல் நேரங்களில் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பகல் நேரங்களில் 44 டிகிரி செல்சியஸ்க்கு மேல் சுட்டெரிக்கும் வெயிலால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாயினர்.

கடந்த சில வாரங்களாக வாட்டி வதைத்த வெயிலால், பல மாவட்டங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. அதன்படி, சுட்டெரித்த வெயிலின் தாக்கத்திற்கு தெலங்கானா முழுவதும் 309 பேர் பலியானதாக மாநில பேரிடர் மேலாண்மைத்துறை அறிவித்துள்ளது.
இதனை மாநில அரசு அமைத்த மூன்று பேர் கொண்ட குழு உறுதி செய்துள்ளது. தெலங்கானா மாநிலத்தில் அதிகபட்சமாக நல்கொண்டா மாவட்டத்தில் 90 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்துள்ளதாக பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.
மெகபூபா நகரில் 44 பேரும், கம்மம் பகுதியில் 37 பேரும் வெயிலுக்கு பலியாகியுள்ளதாக அறிவித்துள்ளது.
தெலுங்கானாவில் தற்போது சராசரியாக 44 டிகிரி வெயில் இருந்து வருகிறது. 2015ம் ஆண்டு கோடை காலத்தின் போது கடும் வெயிலுக்கு தெலுங்கானாவில் 486 பேர் உயிரிழந்திருந்தனர் குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications