கேரளாவில் இன்று மீண்டும் பலத்த மழை பெய்யும்.. தமிழகத்திலும் மழை வெளுக்கும்.. எச்சரிக்கை!

கேரளாவில் இன்று மீண்டும் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    கேரளா மற்றும் தமிழகத்தில் இன்றும் கனமழை பெய்யும்

    டெல்லி: கேரளாவில் இன்று மீண்டும் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்திலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் கேரளாவில் தொடங்கியது. கேரளா, கர்நாடகாவில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை வழக்கத்துக்கு மாறாக அதிகளவில் பெய்து வருகிறது.

    கேரளாவில் வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து வருகிறது. இதனால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ள பாதிப்பை கேரளா சந்தித்துள்ளது.

    320க்கும் மேற்பட்டோர் பலி

    320க்கும் மேற்பட்டோர் பலி

    வெள்ளம் மற்றும் கனமழையால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் 320க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகியுள்ளனர்.

    மீண்டும் பலத்த மழை

    இந்நிலையில் இன்று கேரளாவில் மீண்டும் பலத்த மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளளது. கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, கோழிக்கோடு மற்றும் வயநாடு ஆகிய 8 மாவட்டங்களில் இன்று பலத்த மழை பெய்யும் என தெரிவித்துள்ளது.

    பலத்த காற்று வீசும்

    பலத்த காற்று வீசும்

    மேலும் கேரளாவில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது ஏற்கனவே துயரத்தில் ஆழ்ந்திருக்கும் மக்களுக்கு மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கனமழை முதல் மிக கனமழை

    கனமழை முதல் மிக கனமழை

    இதேபோல் தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய 5 மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.இந்த 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இடியுடன் மழை

    இடியுடன் மழை

    தமிழகத்தின் பிற மாவட்டங்களில் வெப்பச்சலனம் காரணமாக ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மழைக்கு வாய்ப்பு

    மழைக்கு வாய்ப்பு

    சென்னையை பொறுத்தவரையில், மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. ஏற்கனவே கர்நாடகா, கேரள மாநிலங்களில் திறக்கப்பட்டுள்ள நீரால் தமிழகத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+