கனமழையால் வெள்ளம்.. ஸ்தம்பித்து டெல்லி... கடும் போக்குவரத்து நெரிசல் - ஜான் கெர்ரி நிகழ்ச்சி ரத்து!
டெல்லி: தலைநகர் டெல்லியில் பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. வாகனங்கள் மூழ்கும் அளவில் தண்ணீர் பெருக்கெடுத்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தலைநகரில் வரலாறு காணாத வெள்ளத்தால் அங்கு வந்துள்ள அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜான் கெர்ரியின் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது.
வெள்ளநீரால் பாதிப்பு
டெல்லியில் விஜய் சவுக், லோதி ரோடு ஆகிய முக்கிய இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழை வெள்ளத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெரிசல்
ஹரியானாவில் குருகிராம் பகுதியிலும், நொய்டா செல்லும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. தலைநகரத்தின் சாலைகள் கடல்போல காட்சியளிக்கிறது.

ஜான் கெர்ரி
அரசு முறை பயணமாக வெளிவிவகாரச் செயலர் ஜான் கெர்ரி இந்தியா வந்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்திய - அமெரிக்க வர்த்தக முன்னேற்றம் குறித்த ஆலோசனை கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டார்.
|
நிகழ்ச்சி ரத்து
டெல்லியில் உள்ள புனித ஸ்தலங்களுக்கு சென்று ஜான் கெர்ரி பார்வையிடும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக அவரது நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
படம், வீடியோ: சுரேஷ் பரதன்












Click it and Unblock the Notifications