For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ் ஒமிக்ரான் திரிபு: சில நல்ல செய்திகளும் ஓரிரு கெட்ட செய்திகளும்

By BBC News தமிழ்
|
பாதுகாப்பு
Getty Images
பாதுகாப்பு

உலகளவில் ஒமிக்ரான் திரிபால் உண்டாகும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது நம் ஒவ்வொருவரையும் நாளுக்கு நாள் அச்சம் சூழ்ந்து கொண்டே வருகிறது.

பிரிட்டனிலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா கட்டுப்பாடுகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில் ஒமிக்ரான் குறித்து நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பல்வேறு செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இது கடைசி குளிர்காலம் அல்ல

கடந்த வருடத்தை காட்டிலும் இந்த வருடம் அத்தனை சிரமங்களை நாம் சந்திக்கவில்லை என்று சொல்லலாம். கடந்த வருடம் பலர் கிறித்துமஸ் தினத்தன்று அவர்களின் குடும்பத்தினருடன் இல்லை. குடும்பத்தினரை பார்க்க முடியாமல் வீட்டிற்குள் அடைந்து கிடந்தனர்.

பல நாடுகளில் கிறித்துமஸ் தினத்தன்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

ஒமிக்ரான் - குறைந்த தீவிரம்

கொரோனாவின் முந்தைய திரிபுகளை காட்டிலும் ஒமிக்ரான் திரிபு மிதமான அறிகுறிகளை கொண்டதாகவே உள்ளது.

டெல்டா திரிபை காட்டிலும் ஒமிக்ரான் மிதமாகத்தான் உள்ளது என உலகளவிலான பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டவர்கள் 30% முதல் 70 % வரை குறைவான அளவிலேயே மருத்துவமனையில் சேர்க்கப்படும் ஆபத்து உள்ளது.

ஒமிக்ரான்
Getty Images
ஒமிக்ரான்

ஒமிக்ரானால் பாதிக்கப்பட்டால் தொண்டை வலி, மூக்கில் நீர் வருதல், தலைவலி போன்ற அறிகுறிகளே தென்படுகின்றன. ஆனால் அனைவருக்கும் இது மிதமாக இருக்கும் என்று சொல்லமுடியாது. சிலருக்கு இது தீவிரமானதாகவும் மாறலாம்.

ஒமிக்ரான் வேகமாக பரவிவருகிறது

ஒமிக்ரான் தொற்று பாதிப்பு மிதமான அறிகுறியையே ஏற்படுத்துகிறது என்பது ஓர் ஆறுதல் தரும் செய்தி என்றாலும், இது வேகமாக பரவி வருகிறது என்பது கவலைதரும் செய்தி.

கொரோனாவின் பிற திரிபுகளை காட்டிலும் ஒமிக்ரான் வேகமாக பரவி வருகிறது. அதேபோல தடுப்பு மருந்து மற்றும் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நோய் எதிர்ப்பை இது பொருட்படுத்தாமல் போகலாம்.

பிரிட்டனில் செவ்வாயன்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு புதியதாக கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது.

ஆனால் களநிலவரம் இதைவிட அதிகமாக இருக்கலாம். ஏனென்றால் அனைவரும் பரிசோதனை செய்யவில்லை. அதேபோன்று ஒரு தடவைக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இதில் சேர்க்கப்படவில்லை.

முதியோர்களின் நிலை என்ன?

முதியவர்
Getty Images
முதியவர்

கொரோனா தொற்று தீவிரமடையும் ஓர் ஆபத்தான காரணி வயது முதிர்வு.

பிரிட்டனை பொறுத்தவரை 40 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் ஒமிக்ரானால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், மருத்துவமனையில் சேர்க்கப்படுகின்றனர்.

எனவே இது முதியவர்கள் அல்லது ஆதிக ஆபத்தில் உள்ளவர்களை தாக்கினால் என்னவாகும் என்பது தெரியவில்லை.

நோய் எதிர்ப்பை ஒமிக்ரான் சட்டை செய்யாது என்றால் முதியவர்கள் டெல்டா திரிபை காட்டிலும் ஒமிக்ரானால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

சீக்கிரம் மறையும் பாதுகாப்பு

இருடோஸ் தடுப்பு மருந்து ஒமிக்ரானிடமிருந்து சிறியளவிலான பாதுகாப்பை தருகிறது. எனவே பூஸ்டர் டோஸ் குறித்து அதிக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

10 வாரங்களில் ஒமிக்ரானுக்கு எதிரான பாதுகாப்பு மறைந்துவிடும். ஆனால் பொதுவாக தீவிரமான நோய்களுக்கு எதிரான பாதுகாப்பு நீண்ட நாட்களுக்கு நீடிக்கும்.

மருந்துகள் என்ன?

புதிய மருந்துகள் நோயாளிகள் மருத்துவமனைக்கு வருவதை குறைக்க வேண்டும்.

புற்றுநோயாளிகள், நோய் ஆபத்து இருப்பவர்களுக்கு புதிய மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மோல்னுபிரவிர் (Molnupiravir) என்ற ஆன்டிவைரல் மருந்து நமது உடலுக்குள் ஒமிக்ரான் எண்ணிக்கையில் பெருகும் தன்மையை தடுக்கும். மேலும் மருத்துவமனை செல்வதற்கான வாய்ப்பை 30 சதவீத அளவில் குறைக்கும்.

சொட்ரோவிமாப் (Sotrovimab) என்ற ஆன்டிபாடி தெரபி (நோய் எதிர்ப் பொருட்களை அதிகரிக்கச் செய்யும் சிகிச்சை) வைரஸிற்குள் ஒட்டிக் கொண்டு மருத்துமனை செல்லும் வாய்ப்பை 79 சதவீத அளவில் குறைக்கும்.

இது இரண்டுமே வைரஸை மட்டுப்படுத்தும். இதன்மூலம் நோய் எதிர்ப்பு சக்திக்கு செயலாற்ற நேரம் கிடைக்கும்.

அடுத்தது என்ன?

இதற்கு முன்பு நாம் கண்டிராத அளவில் பரவும் ஒரு திரிபை கையாள மிதமான அறிகுறிகள், ஆன்டிவைரல்கள், பூஸ்டர்கள் இது எல்லாம் போதுமானதா என்பதுதான் கேள்வி.

அல்லது ஒமிக்ரானை எதிர்கொள்ள நமக்கு மேலும் தகவல்கள் தேவையா?

இந்த வேகத்தில் ஒமிக்ரான் பரவினால் மிக விரைவில் நிலைமை எவ்வாறு மாறும் என்பதை நாம் தெரிந்துகொள்ளலாம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

BBC Tamil
English summary
Here are the news about Omicron and its mutations
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X