பீகார் மாநிலத்துக்குள் ஊடுருவிய 3 பாகிஸ்தான் தீவிரவாதிகள்.. புகைப்படங்களை வெளியிட்டு தேடுதல் வேட்டை
பாட்னா: பாகிஸ்தானில் இருந்து பீகார் மாநிலத்துக்குள் 3 தீவிரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை அதிர்ச்சி தகவல் வௌியிட்டுள்ளது. அவர்களின் புகைப்படங்களை வெளியிட்டு தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
வரும் அக்டோபர் அல்லது நவம்பரில் பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் பீகாரில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பீகார் முழுவதும் வாகன பேரணி நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேபாளம் வழியாக பீகாருக்குள் பாகிஸ்தானின் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் 3 பேர் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானின் ராவல் பிண்டியை சேர்ந்த ஹூசைன், உமர்கோட்டை சேர்ந்த அடில், பகவல்பூரை சேர்ந்த உஸ்மான் ஆகியோர் ஆகஸ்ட் முதல் வாரத்தில் பீகாருக்குள் ஊடுருவி உள்ளனர். அவர்கள் நாச வேலைகளில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர் என்று உளவுத்துறை எச்சரித்துள்ளது.
உளவுத்துறை அளித்த தகவல்களின் அடிப்படையில் 3 தீவிரவாதிகளின் புகைப்படங்களை பீகார் காவல்துறை வெளியிட்டுள்ளது. அவர்களை கண்டுபிடிக்க மாநிலம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்படுகிறது. நேபாள குடியுரிமை அல்லது இந்திய குடியுரிமை ஆதாரங்களை போலியாக உருவாக்கி 3 தீவிரவாதிகளும் பீகார் மாநிலத்துக்குள் நுழைந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தற்போது பீகாரில் வாகன பேரணி நடத்தி வருகிறார். அவர் திறந்தவெளி வாகனத்தில் பேரணி மேற்கொண்டு வருகிறார். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக ராகுல் காந்தியின் பயண திட்டங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications