ஷேக் ஹசீனாவின் சாம்ராஜ்யத்தை சரிக்கவும், வங்க தேசத்தில் புரட்சி வெடிக்கவும் காரணமான ஐகோர்ட் உத்தரவு
டாக்கா: யாராலும் தன்னை தோற்கடிக்க முடியாது என்று நம்பிக்கொண்டிருந்த வங்க தேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் சாம்ராஜ்யத்தை சரிக்கவும், வங்க தேசத்தில் இவ்வளவு பெரிய புரட்சி வெடிக்கவும், அங்குள்ள ஒரு ஐகோர்ட் கொடுத்த தீர்ப்பு தான் காரணமாக இருந்துள்ளது. வங்கதேச பிரச்சனையின் ஆணிவேர் என்ன.. கோர்ட் தீர்ப்பால் ஏன் அந்த நாட்டில் புரட்சி வெடித்தது என்பது பற்றி பார்ப்போம்.
1947ம் ஆண்டு சுதந்திரத்திற்கு பின்னர் இந்தியாவில் இருந்த பிரிந்த பாகிஸ்தானின் ஒரு அங்கமாக கிழக்கு வங்காளம் இருந்தது. அதாவது இன்றைய வங்கதேசம் 1947-ம் ஆண்டு இந்திய பிரிவினைக்கு பின் பாகிஸ்தான் ஆட்சிக்கு உட்பட்ட கிழக்கு பாகிஸ்தானாக மாறியது. ஆனால் கிழக்கு பாகிஸ்தான் என்பது 1971ம் ஆண்டு வரை தான் இருந்தது. அப்போது பாகிஸ்தான் அரசுக்கு எதிரான போராட்டங்களும் புரட்சிகளும் வெடித்தன.

வங்கதேசம் என்பது மொழிப்பிரச்னை காரணமாக பாகிஸ்தானில் இருந்து பிரிந்தது. உருதை தாய்மொழியாக கொண்ட மேற்கு பாகிஸ்தானுக்கும், வங்காள மொழியை தாய்மொழியாக கொண்ட கிழக்கு பாகிஸ்தானுக்குமான பிரச்சனையாக உருவெடுத்து. மொழி அடக்குமுறையே இந்த பிரச்சனைக்கு காரணமாக இருந்தது. இந்த பிரச்சனை போராக மாறிய நிலையில், இந்த போரை இந்தியா உதவியுடன் ஷேக் முஜிபுர் ரகுமான் என்பவர் நடத்தினார். அவர் தான் வங்காளதேசம் என்ற பெயரில் தனி நாடாக மாற்றினார். அவர் தான் வங்கதேசத்தின் பெரும் தலைவராக போற்றப்படுகிறார். அவாமி லீக் கட்சியின் தலைவரான ஷேக் முஜிபுர் ரகுமான் பின்னர் அந்த நாட்டின் முல் பிரதமரானார்.
1971ம் ஆண்டு போரில் பங்கேற்று உயிர்த்தியாகம் செய்தவர்களின் வாரிசுகளுக்கு சிவில் சர்வீசஸ் மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்பில் அவர் 30 சதவீத இடஒதுக்கீட்டை அவர் 1972-ம் ஆண்டு அறிமுகப்படுத்தினார். இந்த ஒதுக்கீடு இப்போது வரை உள்ளது. 1972ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த இடஒதுக்கீட்டிற்கு வங்கதேசத்தில் முதலில் எதிர்ப்பு இல்லை.. ஆனால் வங்க தேசத்தில் வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. இந்த பிரச்சனைக்கு நடுவில் சிறப்பு ஒதுக்கீடு பிற மாணவர்களின் வேலைவாய்ப்பை கடுமையாக பாதித்தது.
இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் கடந்த 2018-ம் ஆண்டு வங்காளதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அப்போது நடந்த போராட்டத்தின் காரணமாக இடஒதுக்கீட்டை ரத்து செய்தார் பிரதமர் ஷேக் ஹசீனா. ஷேக் முஜிபுர் ரகுமானின் மகளான இவர் தான் பல வருடங்களாக தேர்தலில் வென்று பிரதமராக தொடர்ந்து வருகிறார். ஆனால் ஆட்சியை தேர்வு செய்த மக்களே, தங்கள் உரிமை பறிபோகும் போது, உக்கிரமாக மாறினார். அவர்கள் உக்கிரமாக மாற வங்கதேச உயர்நீதிமன்ற தீர்ப்பு காரணமாக மாறியது.
என்ன நடந்தது: ராணுவ வீரர்களின் மூன்றாம் தலை முறை வாரிசுகள் தங்களுக்கான சிறப்பு இடஒதுக்கீட்டை ரத்து செய்த உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இதனால் கடந்த ஜூன் மாதம் வங்காளதேச உயர்நீதிமன்றம் இந்த இடஒதுக்கீட்டை மீண்டும் அமல்படுத்த உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவை காரணம் காட்டி, 30 சதவீத இடஒதுக்கீட்டை ஷேக் ஹசீனா மீண்டும் அமல்படுத்தினார். இதன் மூலம் பெண்கள், பின்தங்கிய பிரிவினர், சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகள் உள்ளிட்ட சிறப்பு பிரிவினரின் இடஒதுக்கீடு உச்சவரம்பு 56 சதவீதம் மீண்டும் உயர்ந்தது.
ஆனால் ஏற்கனவே வேலையில்லாமல் கடும் கோபத்தில் இருந்த மாணவர்கள் கொதித்து போனார்கள். இனிமேல் இழப்பதற்கு எதுவும் இல்லை என்ற முடிவுக்கு வந்த மாணவர்கள், அதிரடியாக போராட்டத்தில் குதித்தனர் சுதந்திர போராட்ட தியாகிகளின் 3-வது தலைமுறையினருக்கும் இவ்வளவு அதிக இடஒதுக்கீடு வழங்க வேண்டுமா? என்று ஆவேசத்துடன் குதித்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
மொத்த வங்கதேசமும் போர்க்களமாக மாறியது. இதில் 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். வங்கதேச ஐகோர்ட் உத்தரவால் அசாதாரண நிலை ஏற்பட்டதை அறிந்த அந்நாட்டு உச்ச நீதிமன்றம் உடனடியாக தலையிட்டது. அத்துடன் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கான இடஒதுக்கீட்டை 30 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்தது. இதனால் மாணவர் போராட்டம் மெல்ல மெல்ல தணிந்தது. அத்துடன் இயல்பு நிலை வந்தது.
ஆனால் நெருப்பு அணைந்தாலும் புகை அணையாத படி இந்த விவகாரம் அனலாகவே இருந்தது. இதற்கு காரணம்..இந்த போராட்டத்தில் ஈடுபட்ட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் சமூக அமைப்பினரை பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான வங்காளதேச அரசு கைது செய்திருந்தது. அவர்களை விடுதலை செய்யக்கோரி கடந்த ஆகஸ்ட் 3-ந் தேதி மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கினர். இதிலும் போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே பெரும் மோதல் வெடித்தது.
இதையடுத்து பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரி,'பாகுபாட்டுக்கு எதிரான மாணவர்கள்' என்ற பெயரில் இணைந்த மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினார்கள். இந்த போராட்டத்தை கலந்து கொள்ள மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் டாக்கா நோக்கி வரும் மாணவர்கள் அமைப்பு அழைப்பு விடுத்தது. இந்த அழைப்பை ஏற்று மாணவர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள் என எல்லாரும் இணைந்தனர்.
இவர்களுக்கு எதிராக ஆளும் அவாமி லீக் கட்சியின் ஆதரவாளர்கள் வீதிகளில் இறங்கி மாணவர்களை திருப்பி அடித்தனர். இதனால் மீண்டும் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் இரும்பு கம்பிகள், தடிகளால் ஒருவரையொருவர் தாக்கினார்கள். மேலும் ஆளும் கட்சியின் அலுவலகங்கள், பிரமுகர்களின் வீடுகள், போலீஸ் நிலையங்கள், அரசு அலுவலகங்கள் மொத்தமாக சூறையாடப்பட்டது. டாக்கா மொத்தமும் போர்க்களமாக மாறியது.
ராணுவம் போராட்டத்தை ஒடுக்க துப்பாக்கிச்சூடு நடத்தியும், தண்ணீரை பீய்ச்சியடித்தும் விரரட்ட முயன்றது.இதில் 100க்கணக்கனோர் இறந்தனர். எனினும் துளியும் கவலைப்படாமல் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவை பதவி விலக வலியுறுத்தி டாக்கா நோக்கிய நீண்ட பேரணியை போராட்டக்காரர்கள் நடத்தினார்கள். இதில் பல்லாயிரம் வந்தனர். இதனை தடுக்க டாக்கா முழுவதும் ராணுவம், போலீஸ் உள்ளிட்ட பாதுகாப்பு படையினரும் அதிக அளவில் குவிக்கப்பட்ட போதிலும், போராட்டம் கைவிடப்படவில்லை..
டாக்கா மத்திய சதுக்கத்தில் பல்லாயிரம் பேர் குவிந்த நிலையில், ராணுவமும், போலீசாரும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் விரட்ட முயன்றனர். ஆனால் மாணவர்கள் கம்பி, கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சாலைகளில் வெறித்தனமாக மாறினார்கள். கண்ணில் பட்ட ஆளுங்கட்சி தொடர்புடைய கட்டிடங்கள் அனைத்தையும் அடித்து நொறுக்கி தீ வைத்தனர். அத்துடன் ஆளும் அவாமி லீக் கட்சியுடன் தொடர்புடைய நபர்களின் வீடுகளுக்கு தீ வைத்து எரித்ததனர். அந்த கட்சியின் தலைமை அலுவலகம் மற்றும் டாக்கா மாவட்ட அலுவலகங்களை சூறையாடி தீ வைத்து எரித்தனர்.
உச்சகட்டமாக வங்காளதேசத்தை நிறுவியவரும், பிரதமர் ஷேக் ஹசீனாவின் தந்தையுமான ஷேக் முஜிபுர் ரகுமானின் சிலைகளை அடித்து உடைத்து தள்ளிவிட்டனர். இறுதியாக தனக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். அத்துடன் தனது சகோதரி ஷேக் ரெகானாவுடன் சேர்ந்து பிரதமருக்கான அதிகாரப்பூர்வ இல்லத்தில் (கணபாபன்) இருந்து உடனே வெளியேறினார். பின்னர் அவர் ராணுவ விமானம் மூலம் நாட்டை விட்டே வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.
அவர் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறிய தகவல் அறிந்ததும் டாக்காவில் குவிந்திருந்த போராட்டக்காரர்கள் ஆயிரக்கணக்கான பிரதமரின் அதிகாரப்பூர்வ அரண்மனைக்குள் அதிரடியாக புகுந்து சூறையாடினார்கள். அங்கிருந்த டி.வி., மேஜை, நாற்காலிகளை எடுத்துச்சென்றனர். இதையடுத்து பிரதமர் ஷேக் ஹசினா ஆட்சி புரட்சியால் முடிவுக்கு வந்துள்ளது. இதையடுத்து ஆட்சியை வங்காளதேச ராணுவம் எடுத்துக் கொண்டுள்ளது. நாட்டில் இடைக்கால அரசு அமைக்க உதவும் என்றும் அறிவித்துள்ளது. வங்கதேச உயர்நீதிமன்றத்தின் உத்தரவை நாட்டின் தலையெழுத்தையே மாற்றி உள்ளது. ஷேக் ஹசினாவின் சாம்ராஜ்யத்தை சரிக்கவும், வங்கதேசத்தில் புரட்சி வெடிக்க காரணமாக மாறி உள்ளது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications