இந்து மாணவிகளுக்கு ஹிஜாப் கட்டாயம்? மத்திய பிரதேசத்தில் பள்ளி கட்டடங்கள் இடிப்பு! ஒரே பரபரப்பு
போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள பள்ளியில் இந்து மாணவிகளை ஹிஜாப் அணிந்து வரும்படி வலியுறுத்தியதாக புகார் எழுந்தது. இதுபற்றி விசாரணை நடந்து வரும் நிலையில் அனுமதியின்றி பள்ளி கட்டடங்கள் கட்டியதாக கூறி 40 உள்ளாட்சி துறை தொழிலாளர்கள் அதனை இடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் தான் அங்கு சமீபத்தில் ஒரு பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. அதாவது மத்திய பிரதேசத்தின் தாமோ பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இந்து மாணவிகளை ஹிஜாப் அணிந்து வர வலியுறுத்தியதாக புகார்கள் எழுந்தன.

இந்த பள்ளியில் பயிலும் மாணவர்களில் 66 சதவீதம் பேர் முஸ்லிம்களாகவும், 30 சதவீதம் பேர் இந்துக்களாகவும் உள்ளனர். இதற்கிடையே தான் ஹிஜாப் குறித்த விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு கர்நாடகாவில் ஹிஜாப் பிரச்சனை பெரிய அளவில் வெடித்தது. இதனால் மத்திய பிரதேசத்திலும் இந்த பிரச்சனை எல்லை மீறி செல்லாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனால் தான் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா மற்றும் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் ஆகியோர் அடுத்தடுத்து உத்தரவிட்டனர். மேலும் மாணவிகளை குறிப்பிட்ட மதம்சார்ந்த ஆடைகளை அணிந்து வரும்படி கட்டாயப்படுத்தக்கூடாது. இதனை முறையாக பள்ளிகள் பின்பற்ற வேண்டும். இல்லாவிட்டால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் எச்சரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே கல்வித்துறை அதிகாரிகள், மாவட்ட நிர்வாகங்கள் சம்பவம் குறித்து விசாரணையை தொடங்கினர்.அப்போது பள்ளியில் சில கட்டடங்கள் அங்கீகாரமின்றி கட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுபற்றி உள்ளாட்சி துறை விசாரணை நடத்தியது. இதையடுத்து அந்த கட்டடங்களை இடிக்க உத்தரவிடப்பட்டது. இதுபற்றி தலைமை முனிசிபல் ஆபிசர் பயலால் சிங் கூறுகையில், ‛‛அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் பற்றி 3 நாளில் விளக்கம் அளிக்கும்படி பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பினோம். அவர்களின் விளக்கம் என்பது ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இல்லை. இதனால் அனுமதியில்லாத கட்டடம் இடிக்கப்படுகிறது'' என்றார்.
இதையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை பள்ளியை இடிக்க ஜேசிபி வாகனம் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அந்த வாகனத்தில் அங்கு செல்ல முடியவில்லை. மேலும் மாணவர்கள், பெற்றோர்கள் பள்ளியை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பபு ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக உள்ளாட்சி துறையில் பணியாற்றும் 40 தொழிலாளர்கள் பள்ளியின் சுவர் ஏறி குதித்து அங்கு அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்களை இடிக்கும் பணியை தொடங்கினர்.
இதற்கிடையே தான் நூலக வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவற்றில் குறைபாடு உள்ளதாகவும், இந்த விதிமீறல்கள் காரணமாக அந்த பள்ளியின் அங்கீகாரம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. முழுமையாக ரத்து செய்யப்பட்டால் மாணவர்கள் வேறு பள்ளியில் கல்வியை தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வித்துறை அதிகாரி எஸ்கே நீமா கூறினார். தற்போது இந்த பள்ளியில் 1,200 பேர் பயின்று வருகின்றனர். இதனால் அவர்களின் எதிர்காலம் என்வாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-
18 தொகுதிகளில் பாஜக வெல்வது கடினம்? திமுகவிடம் கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிச்சாமி! தாமரைக்கு ‘செக்’ -
ப்ளீஸ் 2 தொகுதிகளை மாத்திக்கலாம்.. அதிமுகவிடம் கேட்க பாஜக திட்டம்.. வெளியான பரபரப்பு தகவல் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
"தமிழகத்தில் பாஜக வளரவில்லை".. அதிமுக தான் எங்கள் பலம்.. மேடையிலேயே தோல்வியை ஒப்புக்கொண்ட அமித்ஷா! -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்!












Click it and Unblock the Notifications