இந்து இளைஞருடன் சென்ற இஸ்லாமிய பெண் பர்தா கிழிப்பு.. சரமாரி தாக்குதல்.. உ.பியில் ஷாக்
லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் 6 நபர்கள் சேர்ந்து முஸ்ஸிம் பெண் மற்றும் அவருடன் பைக்கில் வந்த இந்து இளைஞரை தாக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டிருக்கும் 6 பேரும் முஸ்லீம்கள் என்று காவல்துறை தெரிவித்திருக்கிறது.

உத்தரப் பிரதேசத்தில் சிறுபான்மையினர் மீது அதிக தாக்குதல் சம்பவங்கள் நடப்பதாக அடிக்கடி செய்திகள் வெளியாகும். இப்படியான செய்திகளில் இந்துத்துவா அமைப்பை சேர்ந்தவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டிருக்கும். ஆனால், இன்று நடந்த சம்பவத்தில் முஸ்லீம்கள் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
முஸ்லீம் சமூகத்தை சேர்ந்த சபா மற்றும் இந்து சமூகத்தை சேர்ந்த ரவி என்பவர் என இருவரும் வங்கியில் பணியாற்றி வருகின்றனர். சம்பவத்தன்று இருவரும் காஜியாபாத் பகுதியில் கடன் தொகையை வசூலிக்க சென்றிருக்கிறார்கள். அப்போது 6 பேர் கொண்ட கும்பல் இவர்களை வழிமறித்திருக்கிறது.
பைக்கிலிருந்து சபாவை கீழே இறக்கிய அந்த கும்பல், இருவரின் பெயரை கேட்டுவிட்டு இருவரையும் தாக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக ரவியை சரமாரியாக தாக்கியுள்ளனர். சபா அணிந்திருந்த ஹிஜாப்பை அகற்றியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டிருக்கின்றனர். இதனையடுத்து இளம்பெண் சபா போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை விசாரித்த காவல்துறையினர் 6 பேரையும் கைது செய்துள்ளனர். வீடியோவில் இருக்கும் நபர் யாரேனும் விடுபட்டிருந்தால் அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசசார் தெரிவித்திருக்கின்றனர்.
அவர்கள் கைது செய்யப்பட்ட வீடியோவை போலீசார் வெளியிட்டிருக்கின்றனர். குற்றம்சாட்டப்பட்ட 6 பேரும் தாங்கி தாங்கி நடந்து வரும் காட்சிகள் போலீசார் வெளியிட்ட வீடியோவில் இருக்கிறது.
இந்து அமைப்பினர்தான் இதுபோன்ற பஞ்சாயத்துகளில் சிக்கி வந்தனர். இப்போது இஸ்லாமிய அமைப்பினர் சிக்கியிருப்பது விவாதமாகியிருக்கிறது அரசியல் விமர்சர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications